முக்கிய தலைங்க இல்லாத டெஸ்ட் அணி... மாற்று வீரரை முன்னதாக தேர்வு செய்த பிசிசிஐ...
சிட்னி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்கவுள்ள கேப்டன் விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார்.
அவருக்கு மாற்றாக கருதப்பட்ட ரோகித் சர்மாவும் இன்னும் பிட்னசை நிரூபிக்காத நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. இஷாந்த் சர்மாவிற்கும் இதே நிலையே காணப்படுகிறது.
இந்நிலையில், விராட் மற்றும் ரோகித்திற்கு மாற்றாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடு திரும்பும் விராட் கோலி
டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் விளையாடவுள்ள கேப்டன் விராட் கோலி தொடர்ந்து அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்காமல் தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார். ஆயினும் அணியில் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

மாற்று வீரர் அறிவிப்பு
ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இடம்பெற்றதால், அவர் சிறப்பாக செயல்படுவார் என்பதால் விராட்டிற்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா தற்போது தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும் வகையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். இதையடுத்து தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது.

மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயர்
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக தற்போது குறைந்த ஓவர்கள் தொடர்களில் இடம்பெற்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், நிறுத்தி வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர்களில் இடம்பெறாத வீரர்கள், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை அடுத்து நாடு திரும்புவுள்ளனர். ஆனால் ஐயர் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருப்பார்.

பிட்னஸ் நிரூபிக்க இஷாந்த் போராட்டம்
இதேபோல முக்கிய பௌலராக உள்ள இஷாந்த் சர்மாவும் காயம் காரணமாக பிட்னசை நிரூபிக்கும் வகையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். அவருக்கு மாற்று வீரரையும் பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல போட்டிகளின் இடையில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் மாற்று வீரரை இருத்தி வைக்கும் சூழ்நிலை காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications