உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...!
மும்பை: தினேஷ் கார்த்திக்குக்கு பதில் இனி இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி நடப்பு உலக கோப்பை அரையிறுதியில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்தியா,வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி 20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதன்படி தற்போது தினேஷ் கார்த்திக்கு அணியில் இடம் கிடைக்காது என்ற தகவல் உறுதியாகி உள்ளது.
உலக கோப்பையில் வாய்ப்பு அளிக்கப்பட்டும் தினேஷ் கார்த்திக் சோபிக்க தவறினார். அதனால் அடுத்த உலக கோப்பையையும், எதிர்கால அணியையும் கருத்தில் கொண்டு இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ உள்ளது.
இனி தினேஷ் கார்த்திக் இடம் கிடைக்காது என்றும் அவருக்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டன் அய்யருக்கு தான் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியில் பல மாற்றங்கள் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications