ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர் - வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர்.. மாற்று வீரர் யார் ?
மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் அண்மை காலமாக அடிக்கடி காயம் அடைந்து வருகிறார். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் பெற்று இருந்தார்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலி போல் உச்சம் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.

ஸ்ரேயாஸ் ஐயர்
இதனால் நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத ஸ்ரேயாஸ் ஐயர், பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பங்கேற்று உடல் தகுதியை மீட்டார். எனினும் முதல் டெஸ்டில் அவர் பங்கேற்காத நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

காயம்
இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டியில் 4வது நாள் ஆட்டத்தில் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்காண்டுள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் பேட்டிங் செய்ய வரவில்லை. இதன் காரணமாக இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு பறிப்போனது.

ரோகித் விளக்கம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வலி நினைத்ததை வட அதிகமாக இருந்ததால், அவர் மைதானத்திற்கே 2 நாள் வரவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரை பாவம் என்று குறிப்பிட்ட ரோகித் சர்மா, அவர் மீண்டும் உடனே விளையாட திரும்புவார் என்பது சந்தேகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாற்று வீரர் யார்?
ஸ்ரேயாஸ் ஐயரின் மருத்துவமனை அறிக்கை இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. எனினும் ஜடேஜா காயத்துடன் திரும்பி உள்ளதால் இந்திய அணியில் நடுவரிசையில் பிரச்சினை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications