Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சொன்ன ஒரு வார்த்தையால் தான் சாதித்தேன் - இளம் வீரர் ஓபன் டாக்..

கான்பூர்; இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுகமாகி சதம் விளாசினார்

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு 2021ஆம் ஆண்டு மோசமான ஆண்டாகவே அமைந்திருந்தது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார்.

Shreyas Iyer opens up about How dhoni advice helps to Perform Well

மேலும் காயம் காரணமாக, தாம் நேசித்த கேப்டன் பதவியை டெல்லி அணி நிர்வாகம் பறித்தது. அணிக்கு திரும்பிய பிறகும், தன்னைவிட ஜூனியர் வீரர் தலைமையில் கீழ் விளையாட வேண்டிய நிலை என பல்வேறு இன்னல்களை சந்தித்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.

காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், உடல் தகுதியை எட்டினால் மட்டும் போதாது. உடல் வலுவை அதிகரிக்க முடிவு எடுத்தார். இதற்காக அவர் தேர்ந்து எடுத்தது கால்பந்து பயிற்சி. தனது பாலிவுட் நண்பர்களுடன் இணைந்து தினமும் கால்பந்து விளையாடியதாக கூறும் ஸ்ரேயாஸ் ஐயர், இதன் மூலம் தனது உடல் தகுதி முன்னேறியதாகவும் கூறினார்.

கால்பந்து பயிற்சியின் போது அங்கு தோனி இருந்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். அப்போது தோனியுடன் நிறைய பேசி, ஆலோசனை பெற்றேன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இன்றி தோனி ஜாலியாக பழக கூடிய நபர் என்றும் அவர் கூறினார். பயிற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தினால் மற்ற விஷயங்கள் எல்லாம் தானாக நடக்கும் என்று தோனி தம்மிடம் கூறியதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.

தனது பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே, தனது உயர்வுக்கு மிக முக்கிய காரணம் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்காத வரை எனது வீட்டிற்கு வந்து சாபிட மாட்டேன் என்று பயிற்சியாளர் கூறிவிட்டதாகவும், தற்போது சதம் விளாசியதால், அவர் இப்போது எனது வீட்டிற்கு வருவார் என நம்புகிறேன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, November 28, 2021, 12:35 [IST]
Other articles published on Nov 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+