Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரவர இவங்க அலம்பலுக்கு அளவே இல்லாம போயிடுச்சு... ஓய்வை ஜாலியாக அனுபவிக்கும் வீரர்கள்

மும்பை : கொரோனாவால் அனைத்துவிதமான போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் ஜாலியாக தங்களது வீடுகளில் உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர்.

போட்டிகள் இருந்தாலே, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றவர்களை கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் இருவருக்குள்ளும் அலாதியான நட்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த ஓய்வை அவர்கள் விட்டு வைப்பார்களா? அவர்களது லூட்டி விதவிதமாக தொடர்கிறது. அதை இன்ஸ்டாகிராம் மூலம் நமக்கும் கடத்தி வருகின்றனர்.

போட்டிகள் ரத்து

போட்டிகள் ரத்து

கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் அதிகமான உயிரிழப்புகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வரும்நிலையில், சர்வதேச அளவில் ஏறக்குறைய அனைத்து போட்டிகளும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பொழுதை போக்கி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு

இதனிடையே, வரும் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் 2020 தொடரும் அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுமேலும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது.

கொரோனாவால் கிடைத்த ஓய்வு

கொரோனாவால் கிடைத்த ஓய்வு

தொடர் போட்டிகள், பயிற்சிகள் மற்றும் பயணங்களால் வீரர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் விராட் கோலி தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்தார். இந்நிலையில் பிசிசிஐ கொடுக்காத ஓய்வை அவர்களுக்கு கொரோனா வைரஸ் கொடுத்துள்ளது.

விதவிதமான கொண்டாட்டம்

விதவிதமான கொண்டாட்டம்

தொடர் போட்டிகள் இருந்தாலே நம்முடைய இளம் வீரர்களை கையில் பிடிக்க முடியாது. இன்ஸ்டாகிராமில் மட்டுமே பிடிக்க முடியும். இந்நிலையில், ஓய்வு வேறு கிடைத்துள்ளது. விடுவார்களா... விதவிதமான சேட்டைகளை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தொடர்ந்து வருகின்றனர். ரூம் போட்டு யோசிப்பார்களோ என்னும் வகையாக இருக்கிறது அவர்களது சேட்டைகள்.

ஸ்ரேயாஸ் வெளியிட்ட புகைப்படம்

ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முதலில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் அவர் தன்னுடைய ஆர்ம்ஸ் மற்றும் வாட்சை காண்பிக்கும்படியாக இருக்கிறது. அடுத்த புகைப்படத்தில் நமக்கு ஆச்சர்யம் காத்திருக்கிறது. அது அவருடைய கை இல்லை. மாறாக பின்பக்கமிருந்து ஹர்திக் பாண்டியா கைகளை மட்டும் அவருடன் கோர்த்துள்ளார்.

சஹல் கலாய்

சஹல் கலாய்

இந்த புகைப்படத்தை பார்த்து கே.எல் ராகுல் மறக்காம கைகளை கழுவிடுங்க என்று கமெண்ட் பதிவு செய்ய அதற்கு ஐயர், தாங்கள் கைகளை குலுக்கவே இல்லை என்று பதிலளித்துள்ளார். இதனிடையே, சஹல், 'ஓ ஜீசஸ்' என்று சிரிப்பு எமோஜிகளுடன் அவர்களை கலாய்த்துள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கமே அல்லோல கல்லோலப்பட்டது.

Story first published: Thursday, March 19, 2020, 11:29 [IST]
Other articles published on Mar 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+