Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சி..!! கொஞ்சம் ஏமாற்றம் தான் இருந்தாலும் ஹாப்பி - ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதில் இந்திய அணி வீரர்கள் தடுமாற, ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் விளசினார்.

இதில் 10 பவுண்டரிகளும் , 4 சிக்சர்கள் அடங்கும். ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம் மூலம் இந்தியா கௌரவமான இலக்கை எட்டியது.

ஸ்ரேயாஸ் அதிரடி

ஸ்ரேயாஸ் அதிரடி

முதலில் பந்து நன்றாக திரும்பியதால் அனைத்து வீரர்களுமே திணறினர். பின்னர் சுழற்பந்துவீச்சாளர்களை நெருக்கடி தரும் விதமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். பந்து திரும்புவதற்குள் இறங்கி வந்து அடிப்பது , பந்து திரும்புவதற்கு நேரம் தராமல் பேட்டை விளாசி ரன் சேர்ப்பது என புதிய யுத்தியை ஸ்ரேயாஸ் ஐயர் கடைபிடித்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இறங்கி வந்து அடிப்பதற்குள் பந்தை மிஸ் செய்ய, விக்கெட் கீப்பர் ஸ்டம்ப் அவுட் செய்தார். இதனிடையே போட்டிக்கு பிறகு பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பேட்டிங் செய்யும் போது முதல் 5 ஓவர் மிகவும் பயந்தேன். பந்தை எதிர்கொள்ளவே பதற்றமாக இருந்தது. பின்னர் எப்படி விளையாடுவது, எப்படி ரன் சேர்ப்பது என பயிற்சியாளரிடம் கேட்டேன். அவர் சில யுத்திகளை கூறினார். அந்த யுத்திகளை அப்படியே களத்தில் வெளிப்படுத்தினேன். இது மகிழ்ச்சியை அளித்தது என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Recommended Video

Ind vs SL Kohli, Dravid congratulate Lakmal after he leaves field in his last match | Oneindia Tamil
அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

தற்போது இந்திய அணி 166 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி ஒரு 100 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் களமிறங்கி மேலும் ஒரு 200 ரன்கள் சேர்த்து, இலங்கைக்கு ஒரு 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இந்திய அணிக்கு வெற்றி உறுதியாகிவிடும். இந்த ஆடுகளத்தில் 4வது பேட்டிங் செய்யும் போது பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 12, 2022, 22:35 [IST]
Other articles published on Mar 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+