Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாட்ஷா ரஜினியாக மாறிய ஸ்ரேயாஸ்.. திரும்பும் திசை எல்லாம் ஸ்ரேயாஸ் ஐயர்.. ஒரே மாதத்தில் இத்தனை விருது

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடந்த ஆண்டு சோதனை காலமாக இருந்தது. நேசித்த ஐபிஎல் கேப்டன் பதவி போனது. காயத்தால் கிரிக்கெட்டிலிருந்து விலகல்.

கடுமையான வயிற்று வலியால் 6 கிலோ எடை குறைவு என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். தற்போது அதை எல்லாம் மாற்றி எழுதிவிட்டார் ஸ்ரேயாஸ்.

ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த நவம்பர் மாதம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று அறிமுக போட்டியில் சதம் விளாசினார். இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. அதன் பின்னர், நடப்பாண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

தொடர் நாயகன்

தொடர் நாயகன்

இதன் பின்னர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் 2வது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை தொடர்ந்து வென்றார் ஸ்ரேயாஸ். 3 போட்டியில் 201 ரன்கள் விளாசிய அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தது. இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்கவே இல்லை.

ஐசிசி விருது

ஐசிசி விருது

மேலும் ஒரு டி20 தொடரில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் படைத்தார். இந்த சாதனைகள் மூலம் ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். அத்துடன் அவர் நிற்கவில்லை. இலங்கைக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் படைத்தார்.

ஐபிஎல் கேப்டன்

ஐபிஎல் கேப்டன்

இதன் மூலம் ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்தது. இதற்கிடையில் ஸரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி பெரும் தொகை கொடுத்து வாங்கி அவரை கேப்டனாக்கி அழகு பார்த்துள்ளது, கடந்த 4 நாட்களில் ஸ்ரேயாஸ் ஐயர் 5 விருதுகளையும், கேப்டன் பதவி, 2 சாதனைகளை படைத்துள்ளார். நம் வாழ்க்கையில் எவ்வளவு தோல்வி அடைந்தாலும் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் உதாரணம்.

Story first published: Tuesday, March 15, 2022, 15:51 [IST]
Other articles published on Mar 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+