Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அக்சருக்கு பின் தினேஷ் கார்த்திக்.. அடுத்த போட்டியிலும் இதே தான்? டிராவிட் பிளானை உடைத்த ஸ்ரேயாஸ்

கட்டாக்: இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அக்சர் பட்டேலுக்கு கீழ் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் செய்ய வைத்தது ஏன் என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Recommended Video

IND vs SA ஒதுக்கப்படும் Dinesh Karthik! Pantஐ விளாசிய Gambhir| *Cricket

இந்திய அணி தொடர்ந்து 2 டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்துள்ளது. மேலும் நடப்பாண்டில் தென்னாப்பிரிக்காவிடம் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், 2வது போட்டியில் இந்தியா பயன்படுத்திய யுத்தி மற்றும் தோல்விக்கான காரணம் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

உலககோப்பையில் கவனம்

உலககோப்பையில் கவனம்

அப்போது பேசிய அவர், எங்களுடைய கவனம் எல்லாம் இருத்தரப்பு தொடரை வெல்வதில் இல்லை. உலகக் கோப்பை மீது தான் எங்கள் கவனமே உள்ளது.இப்போது நடைபெறும் போட்டிகளை எல்லாம் பயிற்சியாகவும், பாடமாகவும் தான் கருதுகிறோம். அணியின் ஆலோசனை கூட்டத்தில் போட்டிக்கான திட்டத்தை வகுக்கிறோம்.

அணியாக கற்கிறோம்

அணியாக கற்கிறோம்

ஆனால், அதனை போட்டியில் நடைமுறைப்படுத்துவதில் தவறு நீடிக்கிறது. இந்த தவறை ஒரு அணியாக கற்று கொண்டு அடுத்த போட்டியில் திருத்தி கொள்ள முயற்சி செய்வோம். அது தான் ஆஸ்திரேலிய பயணத்துக்கு முக்கியமானவை. நாங்கள் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதிரடியாக தான் ஆடுவோம் என்று முடிவு செய்து இருந்தோம்.

ஏன் அக்சர் பட்டேல்

ஏன் அக்சர் பட்டேல்

அதனால் தான் விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகும், ரன்களை குவிப்பதிலேயே கவனம் செலுத்தினோம். இதே பிளான் தான் இனி எதிர்காலத்திலும் செயல்படுத்த உள்ளோம். தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் பட்டேலை அனுப்புவது என்பது அணி எடுத்த முடிவு தான். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆட கூடியவர். அதனால் அவருடைய பங்கு 16 ஓவரில் தான் தேவைப்படும்.

அடுத்த போட்டியிலும் தொடரும்

அடுத்த போட்டியிலும் தொடரும்

நேற்று இருந்த சூழலில் எங்களுக்கு 13வது ஓவரில் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் வீரர் தேவைப்படவில்லை. அக்சர் பட்டேல் சிங்கிள்ஸ் ஆடி நல்ல கம்பெனி தருவார் என்பதால் தான் இந்த முடிவு எடுத்தோம். இனி வரும் போட்டியிலும், இதே யுத்தியை தான் செயல்படுத்துவோம்.தினேண் கார்த்திக்கிற்கும் அப்படி விளையாட தெரியும், ஆனால் நாங்கள் முதல் பந்தில் இருந்து அடிக்கும் வகையில் தயார்படுத்த விரும்புகிறோம்.

Story first published: Monday, June 13, 2022, 20:10 [IST]
Other articles published on Jun 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+