அறுவை சிகிச்சை செய்தே ஆகனும்.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு வந்து இறங்கிய இடி.. இந்திய அணிக்கு பெரும் இழப்பு
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடந்த மாதம் மீண்டும் முதுகில் காயம் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். மிகவும் திறமை வாய்ந்த வீரராக அறியப்பட்ட ஸ்ரேயாஸ்க்கு 2022ஆம் ஆண்டு அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது.
விராட் கோலி போன்று தனி ஆளாக அணியை வெற்றிக்கு வழிநடத்தும் சாம்பியன் வீரராக 2023ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயரை மாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. பரமப்பதம் போல் ஏணியில் உயர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மீண்டும் காயம் அடைந்ததன் மூலம் சரிவை சந்தித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக கேப்டன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நடுவரிசையில் இடம், 50 ஓவர் உலக கோப்பையில் அணியில் முக்கியம் இடம் போன்ற பல சவால்களை ஸ்ரேயாஸ் ஐயர் முன் காத்திருந்தது. ஆனால் வேகப்பந்துவீச்சாளருக்கு ஏற்படும் காயம் வகை, பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாக 3 மாதம் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உலக கோப்பை தொடரில் விளையாட முடியாது என்ற காரணத்தால் அதனை ஸ்ரேயாஸ் தள்ளி போட்டார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பாதியில் ஸ்யேராஸ் ஐயர் களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக கேகேஆர் அணி கூறி இருந்தது.
ஆனால் அப்படி செய்வது மிகவும் ஆபத்து என்றும், அறுவை சிகிச்சை செய்யாமல் கிரிக்கெட்டிற்கு தரும்பினால், அதன் பிறகு நடக்கவே கடினமாகிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் அறுவை சிகிச்சைக்கு ஒப்பு கொண்டுள்ளார். இதனால் நடப்பாண்டில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் ஸ்ரேயாஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்ககப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications