Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆனது??.. திடீரென மீட்டிங் போட்ட பயிற்சியாளர்கள்.. பெங்களூருவுக்கு விரைவு!

ஐதராபாத்: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள சூழலில் திடீரென இந்திய அணியில் ஒரு குழப்பம் உருவாகியுள்ளது. மாற்று ஏற்பாடுகள் என்ன செய்வது என்பது புரியாமல் ரோகித் சர்மா குழம்பியுள்ளார்.

இலங்கை அணியுடனான தொடர்களை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்த தயாராகி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்கவுள்ளது.

நாளை மதியம் 1.30 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள ராஜாஜி சர்வதேச மைதானத்தில் முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்

ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்

இந்நிலையில் இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் திடீரென நியூசிலாந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது திடீரென முதுகுவலி ஏற்படுவதை உணர்ந்த அவர், பின்னர் வலி தாங்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் அவசரமாக கூடிய மருத்துவர்களும், பயிற்சியாளர்களும் அறிவுறுத்தியன் பெயரில் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

2022ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவராக ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளார். கடந்த வருடம் மட்டும் 1,609 சர்வதேச ரன்களை விளாசினார். இதில் 14 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். இந்தாண்டும் இலங்கைக்கு எதிராக மிடில் ஆர்டரில் முக்கியமான பார்ட்னர்ஷிப்களை அமைக்க உதவியாக இருந்தார். இதனால் இது பின்னடைவாக ஏற்பட்டுள்ளது.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் ராஜட் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் கூட 186 ரன்களை விளாசினார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 122.36 என இருந்தது.

 சூர்யகுமாரின் வாய்ப்பு

சூர்யகுமாரின் வாய்ப்பு

இந்திய ப்ளேயிங் 11ல் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது 4வது வீரராக களமிறங்கி வருகிறார். ராஜத் பட்டிதார் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தான் பெரும்பாலும் விளையாட வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சூர்யகுமாருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

Story first published: Tuesday, January 17, 2023, 17:46 [IST]
Other articles published on Jan 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+