Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு பெரிய போர்வை.. ஏ பப்பி.. எங்கடா இங்க இருந்த அய்யரைக் காணோம்..!?!

சென்னை: இந்த கொரோனாவைரஸ் வந்தாலும் வந்தது.. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே விளையாட ஆரம்பித்து விட்டனர். விதம் விதமாக டிசைன் டிசைனாக ஆடி அசத்தி வீடியோவும் போடுகின்றனர்.

விளையாட்டுத் துறையினருக்கு இப்போது எதிர்பாராத பிக் பிரேக்கிங் கிடைத்துள்ளது. ஆடிய கால்கள் சும்மா இருக்காது என்பதால் ஏதாவது செய்து கொண்டே உள்ளனர். அந்த வகையில் அவர்களைப் பாராட்டியாக வேண்டும்.

இந்த வரிசையில் தற்போது இந்திய வீரர் ஷிரேயாஸ் அய்யர் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார். சும்மா சொல்லக் கூடாது. பேட்டிங்கில்தான் மாயாஜாலம் நிகழ்த்துவார் என்று பார்த்தால் நிஜத்திலும்.

ஷிரேயாஸ் அய்யர் வீட்டு பொழுதுபோக்கு

ஷிரேயாஸ் அய்யர் வீட்டு பொழுதுபோக்கு

இந்திய கிரிக்கெட்டில் புயலாக நுழைந்தவர் ஷிரேயாஸ் அய்யர். ஐபிஎல் போட்டிகள்தான் இவருக்கு சிறந்த என்ட்ரியாக அமைந்தது. யாரும் எதிர்பாராத வகையில் இவர் காட்டிய அதிரடி ஆட்டம் ரசிகர்களை வாரிக் குவித்தது. இன்று இந்திய கிரிக்கெட்டில் முக்கியமான வீரராக இருக்கிறார் ஷிரேயாஸ் அய்யர். இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது என்றாலும் கூட எதிர்காலம் இவருக்கு பிரகாசமாகவே இருக்கிறது.

நாயுடன் மாஜிக் விளையாட்டு

நாயுடன் மாஜிக் விளையாட்டு

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்.. ஷிரேயாஸ் அய்யர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அது அவரது வீடு போலத் தெரிகிறது. அவர் நாயுடன் விளையாடுகிறார். அதாவது மாஜிக் விளையாட்டு. வீட்டுக்குள் இருந்த பெரிய போர்வையை எடுத்து வந்து நாயுடன் ஒளிந்து விளையாடுகிறார். மாஜிக் ஷோவில் வருவது போல 2 முறை போர்வையை விலக்கி விலக்கி காட்டி விட்டு 3வது முறை காட்டும்போது ஷிரேயாஸ் அய்யர் இல்லை.

நாயே குழம்பிருச்சேப்பா

இதைப் பார்த்து நாய் குழம்பி விடுகிறது. நாமும்தான் குழம்பிப் போய் விடுகிறோம். எங்கடா போனாரு இந்த அய்யர் என்று. இதையடுத்து அந்த நாய் போர்வை அருகே வந்து பார்க்கிறது. பின்னர் அருகில் உள்ள கிச்சனுக்குள் போய்த் தேடுகிறது. அப்போது ஷிரேயாஸ் அய்யர்.. ஏய் பப்பி நான் இங்க இருக்கேன் பார்த்தியான்னு விஜய் ஸ்டைலில் கேட்க நாய் ஓடோடி வருகிறது.

போர்வையுடன் போன ஷிரேயாஸ் அய்யர்

பிறகென்ன ஷிரேயாஸ் அய்யர் பெரிய போர்வையை எடுத்து மடக்கி ரூமுக்குள் போகிறார். நாயும் ஹேப்பியாகி விடுகிறது. இப்படி போகிறது அந்த வீடியோ. விளையாட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தபோதெல்லாம் இப்படி நமது செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவழிக்க பலருக்கும் டைம் இருக்காது. ஆனால் இப்போது இவர்களுடன் விளையாடித்தான் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கு பாருங்க. நாய்களுக்கு கொண்டாட்டம்தான். இரு தினங்களுக்கு முன்பும் கார்டை வைத்து தன்னுடைய சகோதரியுடன் மேஜிக் செய்து காட்டியிருந்தார் ஷிரேயாஸ் ஐயர்.

Story first published: Tuesday, March 24, 2020, 15:17 [IST]
Other articles published on Mar 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+