Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20யில இருந்து ஒருநாள் போட்டிக்கு தாவறது ஜூஜூபி சமாச்சாரம் இல்ல.. ரொம்ப கஷ்டம்.. ஷ்ரேயாஸ்

கேன்பெரா : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை பறிகொடுத்துள்ளது இந்திய அணி.

இந்நிலையில் டி20 போட்டிகளில் இருந்து ஒருநாள் போட்டிகளுக்கு நம்மை உடனடியாக மாற்றிக் கொள்வது கடினமானது என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் 2020 தொடரில் அதிகமாக ஸ்கோர் செய்துள்ள வீரர்கள்கூட ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆஸி தொடரில் திணறல்

ஆஸி தொடரில் திணறல்

கடந்த ஐபிஎல் 2020 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் அவர் அதிக ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார். இதேபோல ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் இந்த தொடரில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாற்றிக் கொள்வது கடினம்

மாற்றிக் கொள்வது கடினம்

இந்நிலையில் ஐபிஎல் தொடர்களில் அதிகமாக வேளைப்பளுவை மேற்கொண்ட வீரர்கள் தற்போது ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியாமல் உள்ளதாக ஷ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்டுள்ளார். மேலும் டி20 போட்டிகளில் இருந்து ஒருநாள் போட்டிகளுக்கு நம்மை உடனடியாக மாற்றிக் கொள்வது கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலிமையாக களமிறங்குவார்கள்

வலிமையாக களமிறங்குவார்கள்

இதேபோல ஐபிஎல்லில் 20 ஓவர்களுக்கு ஆடிய பௌலர்கள் தற்போது 50 ஓவர்களுக்கு பீல்டிங் செய்வதும், 10 ஓவர்களுக்கு பந்துவீசுவதும் கடினமானதாக உள்ளதாகவும அவர்கள் உடனடியாக தங்களை ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது சிரமம் என்றும் அவர் மேலும் கூறினார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர்கள் வலிமையாக களமிறங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

உற்சாகத்தை தந்துள்ள சவால்

உற்சாகத்தை தந்துள்ள சவால்

தாங்கள் பயிற்சி செய்யும் பிட்ச்களுக்கும் விளையாடும் பிட்ச்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளதாகவும் ஆனால் இதை சவாலாக எடுத்துக் கொண்டுள்ளதாவும் ஐயர் தெரிவித்தார். ஆனால் இந்த சவால் தனக்கு உற்சாகத்தையே அளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Wednesday, December 2, 2020, 22:08 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+