Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னால ஒத்துக்கவே முடியல..”.. 2வது ஒருநாள் போட்டி.. ஸ்ரேயாஸ் ஐயர் மனவருத்தம் - காரணம் என்ன?

ட்ரினிடாட்: 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற போதும், இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சியாக இல்லை எனத்தெரிவித்துள்ளார்.

Recommended Video

IND vs WI இந்திய அணியில் இனி Shreyas Iyer-க்கு வாய்ப்பு குறைவு? *Cricket

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியிருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் சரிபட்டு வருவாரா? என்ற விமர்சனம் இருந்தது. எனினும் அடுத்தடுத்து அரைசதங்களை விளாசி, 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு தனது இடத்தை முன்பதிவு செய்து வருகிறார்.

அடுத்தடுத்து அரைசதம்

அடுத்தடுத்து அரைசதம்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற்ற 2 போட்டிகளிலும் 54 (57), 63 (71) அரைசங்கள் அடித்து உதவினார். எனினும் அவரால் அணியை வெற்றி பாதை வரை அழைத்து செல்ல முடியவில்லை. அவர் சதமடித்திருந்தால் இந்திய அணி எந்தவித சிரமும் இன்றி சுலபமாக இலக்கை அடைந்திருக்கும். ஆனால் அது நடக்காததால், இந்தியா போராடி வென்றது.

ஸ்ரேயாஸ் ஐயரின் வருத்தம்

ஸ்ரேயாஸ் ஐயரின் வருத்தம்

இந்நிலையில் தனது தவறு குறித்து வருந்துவதாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 2வது போட்டியில் நான் அடித்த ஸ்கோர் எனக்கு மனவருத்தமாக உள்ளது. நான் அவுட்டான விதம் மிகவும் மோசமாக இருந்தது. அணியை சுலபமாக வெற்றி வரை எடுத்துச்செல்வேன் என நினைத்தேன். ஆனால் துரதிஷ்வசமாக அவுட்டாகிவிட்டேன். அடுத்த போட்டியில் நிச்சயம் சதமடிப்பேன் எனக்கூறியுள்ளார்.

தவறான முடிவு

தவறான முடிவு

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அல்சாரி ஜோசஃப்-ன் ஓவரில் அவுட்டானார். அவர் வீசிய ஃபுல் லெந்த் பந்தை ஸ்ரேயாஸ் லெக் சைடில் அடிக்க நினைத்தார். அவர் நகர்ந்து நின்று விளையாடியிருக்க வேண்டிய அந்த ஷாட்டை, அதே இடத்தில் நின்று ஆடினார். இதனால் பந்து பின் காலில் பட்டு எல்.பி.டபள்யூ அவுட் கொடுக்கப்பட்டது. எனினும் பந்து ஸ்டம்பில் படவில்லை என்றும் சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

Story first published: Monday, July 25, 2022, 12:38 [IST]
Other articles published on Jul 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+