Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

22 பந்துகளில் அரைசதம்.. சரியான நேரத்தில் கேப்டன் இன்னிங்ஸை ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர்.. தரமான அடி!

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக முன் நின்று கேப்டன் இன்னிங்ஸை ஆடி இருக்கிறார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அபிஷேக் சர்மா 1 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Shreyas Iyer

இதன்பின் இஷான் கிஷன் - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்தது. இருவருமே கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் அதிரடியில் பொளந்து கட்டினர். பவர் பிளே ஓவர்களில் அதிரடியை காட்டிய இருவரும், அடுத்த சில ஓவர்களுக்கு இஷான் கிஷன் நிதானம் காட்டினார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் கூட கியரை மாற்றவில்லை.

சிக்சர்களாக விளாசிய தள்ளிய ஸ்ரேயாஸ் ஐயரை நியூசிலாந்து பவுலர்கள் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினர். அதிரடியாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 22 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட அரைசதத்தை எட்டினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச்சாகி வெளியேறினார்.

இருப்பினும் தொடக்க வீரர்கள் இருவரும் சொதப்பிய போது, கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் முன் நின்று ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. முக்கியமான நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் இன்னிங்ஸை ஆடி இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Story first published: Sunday, November 1, 2026, 14:20 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+