For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பொய் பேசாதீங்க ஸ்ரேயாஸ்.. கர்மா என ஒன்று இருக்கு.. ஆகாஷ் சோப்ரா கடும் தாக்கு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பொய் சொல்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். இந்த சூழலில் அணி நிர்வாகத்திற்கும் தமக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோப்பையை வென்ற பிறகும் அணியை விட்டு விலகினார்.

இதன் மூலம் ஸ்ரேயாஸ் 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்குச் சென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் பெற்றார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் குற்றச்சாட்டுக்கு ஆகாஷ் சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

shreyas iyer akash chopra india cricket team kkr

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா ஸ்ரேயாஸ் ஐயர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தன்னிடம் கே கே ஆர் அணியில் இருந்து யாரும் வந்து பேசவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஸ்ரேயாஸ் ஐயரிடம் அணியை விட்டு செல்ல வேண்டாம் என பலரும் பேசினார்கள்.

கே கே ஆர் அணி நிர்வாகிகள் நீண்ட உரையாடலை பலமுறை ஸ்ரேயாஸ் இடம் நடத்தினார்கள். ஆனால் அதன்பிறகும் இரு தரப்பினரும் சுமூகமான முடிவை எட்ட முடியவில்லை. அது ஒரு தனி கதை என்றாலும் கே கே ஆர் அணி வீரர்களிடம் நல்ல நட்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள நேரத்தை செலவழிக்கின்றது. உண்மையில் என்ன நடந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் ஸ்ரேயாஸ் அணியில் சில தவறுகளை செய்திருக்கிறார். இதன் காரணமாக தான் தற்போது அவர் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். கர்மா என்பது நிஜமாகவே இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஸ்ரேயாஸ், தேர்வாகியுள்ள நிலையில் இன்று ரஞ்சி கோப்பையில் ஸ்ரேயாஸ் விளையாடினார். ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என 11 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 23, 2025, 16:02 [IST]
Other articles published on Jan 23, 2025
English summary
Shreyas iyer spokes Lie regarding KKR accuses Akash chopra பொய் பேசாதீங்க ஸ்ரேயாஸ்.. கர்மா என ஒன்று இருக்கு.. ஆகா சோப்ரா கடும் தாக்கு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+