Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“விவிஎஸ் லக்ஷ்மன் சாருக்கு நன்றி”.. கம்பீர் பயிற்சியில் தோற்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உருக்கமான பேச்சு

மும்பை: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியதைத் தொடர்ந்து, இந்திய அணியின் தற்காலிகப் பயிற்சியாளராகச் செயல்பட்ட பேட்டிங் ஜாம்பவான் வி.வி.எஸ் லக்ஷ்மனுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். பயிற்சியாளர் கம்பீரின் கீழ் ஆடிய இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நிலையில் லக்ஷ்மன் பயிற்சியில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்திய அணி ஜிம்பாப்வேயை அதன் சொந்த மண்ணிலேயே 3 - 0 என முழுமையாக 'வைட்வாஷ்' செய்தது. சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும், அறிமுக வீரர்கள் மற்றும் இளம் வீரர்களைக் கொண்டு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் இந்திய அணி தொடரை வென்றது.

Shreyas Iyer thank VVS Laxman after first T20 Series Win as Captain while lost under Gambhir

ஜிம்பாப்வே உடனான மூன்றாவது டி20 போட்டிக்குப் பின் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் தற்காலிக பயிற்சியாளர் லக்ஷ்மன் பேசுகையில், "ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி பயணம் இங்கிலாந்தில் தோல்வியுடன் கடினமாகத் தொடங்கினாலும், அவர் மனம் தளராமல் நம்பிக்கையுடன் செயல்பட்டு அணியை வழிநடத்திய விதம் பாராட்டுக்குரியது. அணியில் இருந்த பல புதிய வீரர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு நம்பிக்கை அளித்த பெருமை கேப்டனையே சேரும்" எனப் புகழ்ந்தார்.

லக்ஷ்மனின் பாராட்டுக்கு நெகிழ்ச்சியுடன் பதிலளித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "பீல்டிங்கில் சில கேட்ச்சுகளைத் தவறவிட்டதைத் தவிர, இந்தத் தொடர் முழுவதும் எங்கள் ஆட்டம் பெரிய குறைகள் இல்லாமல் இருந்தது. எங்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வழிகாட்டிய வி.வி.எஸ் லக்ஷ்மன் சாருக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் மைதானத்திற்குள் செல்லும் போது நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் எங்களுக்குப் பெரிதும் பொருந்தின. அவை எங்களைச் சிறப்பாகச் செயல்பட வைத்தன" எனத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

சாம்சன் கெத்து பேட்டி.. .

சாம்சன் கெத்து பேட்டி.. . "எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம்.. சஞ்சுவுக்கு என்ன வேணுமோ.."

இங்கிலாந்து தொடருக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஓய்வளிக்கப்பட்டதால், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தின் தலைவரான லக்ஷ்மன் தற்காலிகப் பயிற்சியாளராகச் செயல்பட்டார். வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கௌதம் கம்பீர் மீண்டும் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் கம்பீரின் பயிற்சிக்கு இடையிலான ஒப்பீடுகள் தொடங்கி இருக்கின்றன.

Story first published: Monday, July 27, 2026, 18:28 [IST]
Other articles published on Jul 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+