
காயம்
இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டி கடந்த 23ம் தேதி நடைபெற்றது. இதில் ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 8வது ஓவரில் பேர்ஸ்டோ அடித்த பந்தை டைவ் அடித்து தடுத்தபோது அவருக்கு இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக களத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நீக்கம்
ஸ்ரேயாஸுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு எலும்பு இடம் மாறியுள்ளதாக கண்டறியப்பட்டது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குறைந்தபட்சம் 4 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டியுள்ளது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளிலும், வரவிருக்கும் ஐபிஎல் தொடரிலும் இருந்து ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு நம்பிக்கை
ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில் தன் உடல்நிலை குறித்து அவரே ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 'எந்த அளவிற்கு பின் செல்கிறோமோ, அந்த அளவிற்கு மீண்டு வருவோம்' என்பார்கள். எனவே நான் விரைவில் வருவேன் என தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனாக உள்ளார். அவர் ஐபிஎல்-ல் பங்கேற்க முடியாததால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட், ஸ்டீவ் ஸ்மித், ரவிச்சந்திரன் அஸ்வின் யாரேனும் ஒருவருக்கு கேப்டன்சி வாய்ப்பு கொடுக்கப்படலாம். அதே போல இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள போட்டிகளில் அவரின் இடத்திற்கு சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.


Click it and Unblock the Notifications