Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி கேப்டனாக அனைத்து விதமான போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் சாதிப்பார்- லட்சுமண்

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமைப் பண்பு மற்றும் வியூகங்களை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமண் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கேப்டனாக பல சாதனைகளைப் படைப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியுடன் இணைந்து பணியாற்றிய விவிஎஸ் லட்சுமண், ஸ்ரேயாஸ் ஐயரின் வழிகாட்டுதல் திறன் குறித்து பேசினார். "இது அவரது கேப்டன்சி பயணத்தின் தொடக்கம் மட்டுமே. ஆனால், அவர் மிகப்பெரிய வெற்றிகளைப் பெறுவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

Shreyas Iyer

அவர் வீரர்களின் கேப்டன் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் மிகவும் இலகுவாக உணர வைக்கிறார், அத்துடன் களத்தில் முன்மாதிரியாக நின்று அணியை வழிநடத்துகிறார்" என்று குறிப்பிட்டார்.

"பேட்டிங் அல்லது ஃபீல்டிங் என எதுவாக இருந்தாலும் சரி, அணி கூட்டங்களுக்கு முன்பாகவே எதிரணியின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து முறையான திட்டங்களுடன் ஸ்ரேயாஸ் தயாராகிவிடுகிறார். அவரது தயாரிப்பு முறை மிகவும் துல்லியமாக இருக்கிறது. மேலும், அவர் வீரர்களின் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். யுத்திகள் பொறுத்த வரை மிகக் கூர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படக்கூடிய அவருக்கு கேப்டனாக மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது" என்றார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சூழலில் இருந்து ஜப்பான் ஆடுகளங்கள் முற்றிலும் மாறுபட்டிருந்த போதிலும், இந்திய வீரர்கள் அதற்கு விரைவாகப் பழகி தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.

Story first published: Tuesday, October 6, 2026, 15:28 [IST]
Other articles published on Oct 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+