Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் மகளுடன் சுப்மன் கில் பிரேக் அப்? பிறந்தநாள் பார்ட்டியில் நடந்ததை கவனிச்சீங்களா?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டல்கரை காதலிப்பதாக செய்திகள் உலா வந்தன. ஆனால் இந்த காதலை சச்சின் டெண்டுல்கர் ஏற்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த சூழலில் அண்டர் 19 கிரிக்கெட் அணியில் இருந்து உலகக் கோப்பையை வென்ற கில் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக விளங்கி வருகிறார்.

கில் 47 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடி 2328 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், 13 அரை சதம் அடங்கும். இதேபோன்று 21 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 578 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், 3 அரை சதம் அடங்கும். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் விளையாடியுள்ள கில், 1492 ரன்கள் அடித்திருக்கிறார்.

shubman gill cricket sara tendulkar

இதில் நான்கு சதம்,6 அரை சதம் அடங்கும். இந்திய அளவில் தவிர்க்க முடியாத வீரராக கில் வளர்ந்து வருகிறார். தற்போது கில் இந்திய அணியின் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜிம்பாப்வே தொடரில் தான் கேப்டனாக செயல்பட்டார். இதனால் அடுத்த கேப்டன் கில் தான் என்று ரசிகர்களும் பாராட்டி வரும் நிலையில் அவருக்கு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டன் ஆகவும் செயல்பட வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக கில்லும், சாரா டெண்டல்கரும் காதலித்து வந்ததாக அப்போது செய்திகள் உலா வரும். மேலும் சாரா டெண்டல்கர் கில் பலமுறை டேட்டிங் செய்து இருக்கிறார்கள். இது குறித்து சச்சின் டெண்டுல்கரே ஒரு முறை மறைமுகமாக தன்னுடைய கிரிக்கெட்டில் கில், கவனம் செலுத்தி பெரிய ஸ்கோர் அடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கில்லுக்கும் சாரா டெண்டுல்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் தற்போது பேசிக் கொள்வதில்லை என்றும் முன்பு போல் நெருக்கமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் கில் தற்போது சாரா அலிகான் போன்ற நடிகையுடன் சுற்றி டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் அவ்வப்போது வந்தது. கில் கிரிக்கெட்டில் தனிப் பாதையில் செல்வது போல் சாரா டெண்டுல்கர் மாடலிங் உலகில் தற்போது தனி பாதையில் சென்று வருகிறார். பல போட்டோ ஷூட்டுகள் மாடலிங் என்று சாரா டெண்டல்கர் பிசியாக இருக்கிறார்.

shubman gill cricket sara tendulkar

இந்த சூழலில் கில் தன்னுடைய 25ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். தன்னுடைய கிரிக்கெட் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு பார்ட்டியை அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பார்ட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் போன்ற நட்சத்திரங்கள் பங்கு பெற்றனர். இதில் டிஜே மியூசிக் எல்லாம் வைத்து இரவு முழுவதும் ஆடி கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு சாரா டெண்டுல்கர் வரவில்லை என தெரிகிறது.

ஆனால் கில் இது குறித்து எல்லாம் கவலைப்படாமல் பார்ட்டியில் உச்சபட்ச கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கில்லின் பிறந்தநாளுக்கு சாரா டெண்டுல்கர் எந்த ஒரு வாழ்த்து செய்தியும் சொன்னது போல் தெரியவில்லை. வெளிப்படையாக வாழ்த்து செய்தி இதுவரை சொன்னது கிடையாது என்றாலும் மறைமுக போட்டோவை கூட அவர் பதிவிடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் instagram பக்கம் வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகி இருக்கிறது. இதனால் காதல் முறிவால் சாரா டெண்டுல்கர் சோகத்தில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Tuesday, September 10, 2024, 15:30 [IST]
Other articles published on Sep 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+