சுப்மன் கில் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. பிளேட்லெட் குறைந்ததால் அவசர முடிவு
சென்னை : இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுப்மன் கில்-க்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட்டின் அளவு குறைந்ததால் அவசரமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தது பிசிசிஐ.
அவருக்கு அங்கே சிறப்பு கண்காணிப்பு அளித்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருடன் இந்திய அணியின் மருத்துவர் ரிஸ்வான் தங்கி அவரை கண்காணித்து வந்தார். பின் அவர் உடல்நிலை சீராக இருந்ததால் காவேரி மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சுப்மன் கில்-ல்லுக்கு என்ன ஆனது? :
இந்திய அணியின் துவக்க வீரராக இந்த ஆண்டு சுப்மன் கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு அதிக ரன் குவித்த வீரர் சுப்மன் கில் தான். அவர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்காக ஆடுவது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை போட்டிக்கு வந்த சுப்மன் கில்லுக்கு லேசாக காய்ச்சல் இருந்தது. எனினும், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்தப் போட்டியில் ஆடவில்லை.
அவருக்கு காய்ச்சல் அதிகரிக்கவே, மருத்துவமனையில் ஆலோசனை பெற்றுவிட்டு ஹோட்டல் அறையிலேயே அவருக்கு பாட்டில் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது. பொதுவாக டெங்கு காய்ச்சல் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பிளேட்லெட் எண்ணிக்கை 1,00,000க்கும் கீழ் செல்லும்.
அப்படி சென்றால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். தற்போது சுப்மன் கில்-க்கு பிளேட்லெட் எண்ணிக்கை 7,00,000-மாக கீழிறங்கி உள்ளது. அதனால், அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீண்டும் அவரது பிளேட்லெட் எண்ணிக்கை 1,00,000துக்கு வந்தால் மட்டுமே அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறலாம் என்றார் நிலையில், ஒரே நாளில் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். அவரை வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுக்குமாறு மருத்துவமனை அறிவுறுத்தி இருக்கிறது.
அவரால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியுமா? மூன்று மணி நேரம் தொடர்ந்து பீல்டிங் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர்கள் தங்களின் உடல் பலத்தை திரும்ப பெற சிறிது காலம் ஆகும். எனவே, சுப்மன் கில் நிச்சயமாக ஆகஸ்ட் 14 அன்று நடைபற உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் ஆடவே முடியாது என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி அதற்கு அடுத்த சில போட்டிகளிலும் கூட சுப்மன் கில் ஆட முடியாது என்றே கருதப்படுகிறது. அவர் சில நாட்கள் ஓய்வு எடுத்து உடல் பலத்தை திரும்ப பெற்று உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும். அப்போது தான் அவரால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும். குறைந்தது 10 நாட்களாவது இதற்கு ஆகலாம்.


Click it and Unblock the Notifications