For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs WI 4th T20 - வெஸ்ட் இண்டீசை சூளுக்கு எடுத்த இந்திய அணி.. பட்டாசை கொளுத்திய ஜெய்ஸ்வால், கில்

ஃபுளோரிடா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கேல் மேயர்ஸ் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் ஆர்ஸ்தீப் இருவரின் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து கைப்பற்றினார். இதன் பிறகு ஒரே ஓவரில் நிக்கோலஸ் பூரான் மற்றும் ரோமன் போவெல் ஆகியோரின் விக்கெட்டுகளை தலா 1 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

Shubman gill and ishan kishan brilliant innings made india beat wi by 9 wickets

29 பந்துகளில் சாய் ஹோப் 45 ரன்கள் குவிக்க, ஹேட்மயர் இந்திய பந்துவீச்சை பொளந்து எடுத்தார். ஹேட்மயர் .39 பந்துகளில் 61 ரன்களை எடுக்க 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் ஆர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். இந்த தொடரில் கில் உள்ளிட்ட எந்த தொடக்க வீரர்களும் நிலைத்து நின்று விளையாடவில்லை. குறிப்பாக கில், அகமதாபாத்தை தவிர எந்த மைதானத்திலும் சரியாக விளையாட மாட்டார் என்ற விமர்சனம் எழுந்தது.

அந்த விமர்சனத்திற்கு தனது பேட் மூலம் பதில் கொடுத்தார் சுப்மன் கில். ஜெய்ஸ்வால் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். ஜெய்ஸ்வாலும், கில்லும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க, 5 ஓவர் முடிவில் எல்லாம் இந்திய அணி 50 ரன்களை கடந்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எல்லாம் இந்திய வீரர்களுக்கு பவுண்டரிக்கு ராக்கெட் விட்டனர்.

இதனால் 10 ஓவரில் எல்லாம் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. அபாரமாக விளையாடிய கில் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுபக்கம் ஜெய்ஸ்வால் 33 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து கில் பட்டையை கிளப்ப வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் செய்வது தெரியாமல் தினறினர். கில் 47 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் ஜெய்ஸ்வால் 51 பந்தில் 84 ரன்களை எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 17 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Saturday, August 12, 2023, 23:32 [IST]
Other articles published on Aug 12, 2023
English summary
Shubman gill and ishan kishan brilliant innings made india beat wi by 9 wicketsIND vs WI -ஹேட்மயர் அதிரடி ஆட்டம்.. இமாலய இலக்கை எட்டிய வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியாவின் தலை தப்புமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+