Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது இடத்தில் பேட் செய்ய சுப்மன் கில், ஜோ ரூட் அஞ்சுகிறார்கள்.. புஜாராவை பாராட்டிய இங்கி. கேப்டன்

இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். தனது மகத்தான வாழ்க்கையில், இந்திய டெஸ்ட் அணியில் டிராவிட் போன்ற ஜாம்பவான் களமிறங்கிய மூன்றாவது இடத்தில் களமிறங்கி அசத்தினார்.

இந்த நிலையில், புஜாராவின் திறமையை குறித்து பாராட்டிய நாசன் ஹூசைன், தற்போதைய பேட்ஸ்மேன்களான ஷுப்மன் கில் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் பேட் செய்ய விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். இது குறித்து பேசிய அவர், "புஜாரா, ஒரு உண்மையான பழைய பாணியான மூன்றாவது இட பேட்ஸ்மேன்."

Naseer Hussain

"ராகுல் டிராவிட் போன்ற எல்லா காலத்திலும் சிறந்த மூன்றாவது இட பேட்ஸ்மேனை மாற்ற வேண்டியிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றாவது இட பேட்ஸ்மேன்கள் இல்லாதது ஒரு பற்றாக்குறையாக உள்ளது. இங்கிலாந்து அணியில் கூட, ஜோ ரூட் அதை செய்ய விரும்பவில்லை. இந்தியாவில் ஷுப்மன் கில், கேப்டன்ஷிப் பெற்ற பிறகு, நான்காவது இடத்தில் பேட் செய்ய விரும்புகிறார்," என்று நாசர் ஹுசைன் தெரிவித்தார்.

"நமது காலத்தில், உங்கள் மூன்றாவது இட பேட்ஸ்மேன் உங்கள் சிறந்த வீரராக இருந்தார். அது விவ் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங் அல்லது ராகுல் டிராவிடாக இருக்கலாம். இது எளிதான இடமல்ல, ஆனால் புஜாரா அதை யாரையும் விட சிறப்பாக செய்தார். மற்றொரு பழைய பாணி பேட்ஸ்மேன் இப்போது இல்லை."

"உயிரை வைத்து விளையாட கூடிய வீரராகவும், என் உடலை மீறி தான் செல்ல வேண்டும் என்று செல்ல கூடிய வீரராகவும் பந்தை தாமதமாக விளையாடி, சில சிறந்த இன்னிங்ஸ்களை வழங்கியவர். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது."

"இந்திய ரசிகர்கள் அவரை இப்படி விளையாடியதற்காக விரும்பினர். கோலி போன்றவர்கள் இருக்கும் மிடில் ஆர்டரைப் புதிய பந்திலிருந்து பாதுகாத்தார். அவருடன் பணிபுரிந்தபோது, அவர் பேட் செய்தது போலவே இருந்தார். மிகவும் அமைதியான, மென்மையாகப் பேசுபவர் மற்றும் நிறைய அர்த்தமுள்ளவற்றைப் பேசுபவர்," என்று ஹுசைன் கூறினார்.

Story first published: Tuesday, September 2, 2025, 16:30 [IST]
Other articles published on Sep 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+