Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தேவையா கில், கோலி ?ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. கோட்டை விட்ட விராட் கோலி

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு தலா 16 ரன்களில் பெவிலியன் திரும்பினர். 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஒருமுறை கூட வென்றதில்லை.

இந்த நிலையில் அகமதாபாத்தில் இந்தியாவை முதல் முறையாக வீழ்த்துவோம் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான அணி களம் இறங்கியது. டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Shubman gill got out for 16 runs due to over confidence shot vs pakistan

இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் அரை சதமும் , முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர்.மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்கள் எல்லாம் 191 ரன்களை இழந்தது.இதில் சர்துல் தாக்கூரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும்.இந்த எளிய இலக்கை இந்திய அணி பொறுமையாக விளையாட வெற்றியைப் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் இருந்து மீண்டு களத்திற்கு திரும்பிய கில், இன்று பேட்டிங் செய்யும்போது அதிரடியாக விளையாட முற்பட்டார்.

ஷாகின் ஆப்ரிடி மற்றும் ஹசன் அலி ஆகிய ஓவர்களில் பவுண்டரிகளை விளாச அவர் 11 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும். இந்த நிலையில் ஷாகின் ஆப்ரிடி வீசிய ஆட்டத்தின் 2.5 ஓவரில் பந்தில் கில் தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆட அது பாய்ண்டில் நின்ற சதாப் கான் இடம் கேட்ச் ஆனது. இதன் மூலம் இந்திய அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதே போன்று, உலக கோப்பையில் 8 ஆண்டுகளுக்ககுபிறகு விராட் கோலி சாம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் அதீத நம்பிக்கை காரணமாக, தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி விக்கெட்டை 16 ரன்களில் இழந்தார்.

எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது இவ்வளவு அவசரம் தேவையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கில் , கோலி ஆகியோர் பொறுமையுடன் விளையாடி இருந்தாலே நிச்சயம் நல்ல பார்ட்னர்ஷுப் அமைத்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கலாம். எனினும் ஓவர் காண்பிடன்சில் விளையாடியதால் தான் அவர் ஆட்டம் இருந்தார் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Story first published: Saturday, October 14, 2023, 18:32 [IST]
Other articles published on Oct 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+