Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்..! ஆச்சர்யம்.. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்…!! அந்த இளம் வீரருக்கு கேப்டன் பதவி..!!

பெங்களூரு: துலீப் டிராபியில் இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக வளரும் வீரரான சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பகலிரவு போட்டியாக துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப் பட்டது. அதாவது ஆஸ்திரேலியா பாணியில் பிங்க் நிற பந்தில் ஆடப்பட உள்ளது. ஆனால், பிங்க் நிறத்துக்கு பதிலாக மீண்டும் சிகப்புப் பந்து போட்டிக்கு தயாராகிறது.

இந்தியாவின் டாப் உள்நாட்டு வீரர்கள் களம் காணும் துலீப் டிராபி கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. செப்டம்பர் 5-9 இடையே பெங்களூருவில் நடைபெறும் பைனல் மட்டும்தான் பிங்க் பந்தில் பகலிரவு போட்டியாக ஆடப்படும்.

அணிகள் அறிவிப்பு

அணிகள் அறிவிப்பு

அதற்காக இந்தியா புளூ, இந்தியா ரெட், இந்தியா கிரீன் அணிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக இந்திய அணியின் வளரும் நட்சத்திரம் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா கிரீன் அணிக்கு பைஸ் பாசலும், இந்தியா ரெட் அணிக்கு பிரியங்க் பாஞ்சலும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் யார்?

வீரர்கள் யார்?

இந்தியா ப்ளூ அணி வீரர்கள் வருமாறு: சுப்மன் கில் கேப்டன், ரிதுராஜ் கெய்ல் வாட், ரஜத் படிதார், அன்மோல்ப்ரீத் சிங், ரிக்கி புய், அங்கிட் பானே, ஸ்னெல் படேல் (வி.கீ), ஷ்ரேயஸ் கோபால், சவ்ரவ் குமார், ஜலஜ் சக்சேனா, துஷர் தேஷ்பாண்டே, பாசில் தம்பி, திவேஷ் பதானியா, அனிகெட் சவுத்ரி, அஷுடோஷ் அமர்.

இந்தியா ரெட்

இந்தியா ரெட்

இந்தியா ரெட் அணி வீரர்கள்: பிரியங்க் பஞ்சல் கேப்டன், அபிமன்யு ஈஸ்வரன், அக்சர் படேல், கருண் நாயர், இஷான் கிஷன் (வி.கீ), ஹர்பிரீத் பாட்டியா, ஆதித்ய சர்வடே, மஹிபால் லோம்ரோர், அக்ஷய் வகாரே, வருண் ஆரோன், ரோனித் மோர், ஜெய்தேவ் உனாட்கட், சந்தீப் வாரியர், அங்கிட் கல்சி.

கீரின் அணி வீரர்கள்

கீரின் அணி வீரர்கள்

இந்தியா கிரீன் அணி வீரர்கள்: பைஸ் பாசல் கேப்டன், அக்ஷத் ரெட்டி, துருவ் ஷோரி, பிரியம் கார்க், சித்தேஷ் லாத், அக்ஷ்தீப் நாத், ராகுல் சாஹர், தர்மேந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், அங்கிட் ராஜ்புத், இஷான் பொரெல், தன்வீர் உல் ஹக், அக்ஷய் வாத்கர் (வி.கீ), ராஜேஷ் மொஹாந்தி, மிலிந்த் குமார்.

Story first published: Wednesday, August 7, 2019, 8:59 [IST]
Other articles published on Aug 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+