டி20 உலககோப்பை இந்திய அணியிலிருந்து வெளியே போங்க சுப்மன் கில்.. சாம்சனுக்கு லக்.. பிசிசிஐ அதிரடி
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். நடப்பாண்டில் கில் 15 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 291 ரன்கள் தான் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 24 என்ற அளவில் மோசமாக இருந்தது.
அவருடைய ஸ்ட்ரைக் கிரேட் 137 என்ற அளவில் இருந்தது. நடப்பாண்டில் ஒருமுறை கூட அவர் 50 ரன்கள் தொடவில்லை. இதனால் கில்லை அதிரடியாக நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். கில் வந்ததன் காரணமாக அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லாமல் இருந்தது.

இந்த சூழலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிகள் காயம காரணமாக விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் பதிலாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் பட்டையை கிளப்பினார். இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
இது ரசிகர்களை மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. பதிலாக அக்சர் பட்டேல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று கில் இடத்திற்கு சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் 513 ரன்கள் குவித்த இசான் கிசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் டி20 உலக கோப்பை இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் சூரிய குமார் பேட்டிங்கில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அணியின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்படுவதால் அவரை கேப்டனாக தொடர்கிறார். இதேபோன்று டி20 அணியில் ரிங்கு சிங்கும் சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக இந்திய அணி என்ன தவறு செய்ததோ அதனை தற்போது திருத்திக் கொண்டிருக்கிறது. இது ஒரு நல்ல முடிவாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications