Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு எதிரா 50 ரன்கள் குவிப்பு... முதல் இளம் துவக்க வீரர் பெருமையை தட்டிசென்ற கில்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்கினார் சுப்மன் கில்.

இதில் முதல் அரைசதத்தை கடந்து சாதனை புரிந்துள்ளார் சுப்மன் கில். மேலும் ரோகித் சர்மாவுடன் இணைந்து 70 ரன்களையும் பார்ட்னர்ஷிப்பில் குவித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அரைசதத்தை கடந்துள்ள முதல் இளம் துவக்க வீரர் என்ற பெருமை கில்லிற்கு கிடைத்துள்ளது.

இந்தியா -ஆஸ்திரேலியா

இந்தியா -ஆஸ்திரேலியா

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 3வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய சுப்மன் கில் தனது அரை சதத்தை கடந்துள்ளார்.

நிதானமான ஆட்டம்

நிதானமான ஆட்டம்

இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்துள்ளனர். தங்களது நிதானமான ஆட்டத்தின்மூலம் இந்தியாவிற்கு சிறப்பான துவக்கத்தை இருவரும் தந்துள்ளனர். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 96 ரன்களை எடுத்துள்ளது.

இளம் துவக்க வீரர் சாதனை

இளம் துவக்க வீரர் சாதனை

இந்நிலையில் இந்த போட்டியில் அடித்த அரைசதத்தின்மூலம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அரைசதத்தை கடந்துள்ள இளம் துவக்க வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். அவர் தனது 21வது வயதில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

ஒருநாள், டி20யில் சாதனை

ஒருநாள், டி20யில் சாதனை

முன்னதாக இளம் வயதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அரைசதத்தை முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தனது 22வது வயதிலும் டி20யில் அரைசதத்தை கே.எல் ராகுல் தனது 28வது வயதிலும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை கில் மேற்கொண்டுள்ளார்.

Story first published: Friday, January 8, 2021, 14:09 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+