Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முட்டாள் தனமாக முடிவு எடுத்த கில்.. நடுவர் செய்த தவறு அம்பலம்.. அவ்வளவு என்ன சோம்பேறி தனம்?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் சுப்மன் கில் செய்த ஒரு தவறு மிகப்பெரிய தாக்கத்தை போட்டியில் ஏற்படுத்தி விட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து t20 போட்டிகள் கொண்ட தொடரில் கில் 3, 7, 6 ரன்களை தான் அடித்தார். இதனால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனை அடுத்து நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 77 ரன்களை கில் சேர்த்தார்.

Shubman gill blunder mistake by not opting for DRS in 5th t20 vs WI

இதனால் இன்றைய ஆட்டத்திலும் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி பெற்று தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. கில் நல்ல பார்மில் இருந்ததால் இன்றைய ஆட்டத்தில் நிலைத்து நின்று விளையாடுவார் என அணி வீரர்களும் நம்பி பெவிலியனில் ஹாயாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் கில். அகேல் உசேன் வீசிய பந்தை எதிர்கொள்ளும் போது அது கில்லின் காலில் பட்டது.

இதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவுட் கேட்க நடுவர்களும் அவுட்டு கொடுத்து விட்டனர். இதனை அடுத்து ரிவ்யூ கேட்காமல் பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார். கைவசம் 2 ரிவியூ இருக்க, அதனை கில் பயன்படுத்தாமல் போனது பெரிய தவறு என பின்னால் தெரிந்தது. கில் பெவிலியன் வந்த பிறகு இதன் ரீப்ளே காட்டப்பட்டது. அப்போது பந்து ஸ்டெம்பில் படாமல் விலகி சென்றிருக்கும் என கிராபிக்ஸ் காட்சிகள் கணித்திருந்தது.

இதனால் கில் மிகப்பெரிய தவறு செய்து விட்டதை பின்னர் அனைவரும் உணர்ந்தனர். கில் இதற்கு ரிவ்யூ கேட்டிருந்தால் நடுவரின் ரிப்ளேவில் பந்து ஸ்டெம்பில் படாமல் விலகி சென்று இருக்கும் என தெரிந்திருக்கும். கில்லும் தொடர்ந்து விளையாடி இருப்பார். ஆனால் ரிவியூ கேட்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் பெவிலியன் நோக்கி சென்று விட்டார்.

இதனை பார்த்ததும் சக அணி வீரர்களை கடுப்பாகி தலையில் அடித்துக் கொண்டனர். கில் ஏற்கனவே இதே போல் ஒரு தவறை செய்தது குறிப்பிடத்தக்கது. வீட்டிற்கு விரைவில் செல்ல வேண்டும் என்பதற்காக இதுபோல் நடந்து கொண்டாரா என ரசிகர்களும் கடுமையாக சாடி வருகின்றனர்.

Story first published: Sunday, August 13, 2023, 23:33 [IST]
Other articles published on Aug 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+