லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில், 754 ரன்கள் குவித்து இருந்தார். இதில் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதம் அடங்கும். இங்கிலாந்து தொடர் ஒன்றரை மாதம் நீடித்தற்கு, பிறகு வீரர்கள் அனைவரும் ஓய்வில் உள்ளனர்.
இந்த தருணத்தில் துலீப் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் நார்த் சோன் அணியின் கேப்டனாக கில், விளையாடப் போகிறார். இதுதான் கவாஸ்கரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த வங்கதேச தொடர் தற்போது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இலங்கைக்கு தங்கள் அணியை அனுப்பும் முடிவையும் பிசிசிஐ எடுக்கவில்லை. இதன் மூலம் உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு பிசிசிஐ முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இதன் மூலம் துலீப் கோப்பையில் விளையாட அனைத்து வீரர்களுமே இருப்பார்கள். இதேபோன்று தற்போது நார்த் சோன் அணியின் கேப்டனாக கில் அறிவிக்கப்பட்டிருப்பது இந்த தொடருக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கின்றது. ஒரு கேப்டனே உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது அது அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.
ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டு வரும் வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டால், அது நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தான் இருக்கும். ஆனால் கில் விளையாட முடிவெடுத்து இருக்கின்றார். என்னை கேட்டால் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
இங்கிலாந்தில் கூட வெயில் சுட்டெரித்தது. இதற்கு குளோபல் வார்மிங் ஒரு காரணமாக கூட இருக்கலாம். எனினும் அது இந்திய வீரர்களுக்கு ஏற்ற சூழலாக என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனினும் ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு துலீப் கோப்பை தொடர் நடைபெறுவதால் ஸ்டார் வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.