Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்காவிடம் வாங்கிய அடி.. விழித்துக் கொண்ட கில்.. பிசிசிஐ-க்கு வைத்த கோரிக்கை

மும்பை: சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து 'ஒயிட் வாஷ்' ஆனதைத் தொடர்ந்து, இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் அணியின் எதிர்காலம் கருதி சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். "டெஸ்ட் போட்டித் திட்டமிடலில் கேப்டனுக்கு அதிக அதிகாரம் வேண்டும்" என்ற அவரது கோரிக்கைக்கு பிசிசிஐ செவிசாய்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடைய முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது, போதிய அவகாசம் இல்லாததுதான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த நான்கே நாட்களில், தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர் தொடங்கியது. இதனால் வீரர்களால் டெஸ்ட் மனநிலைக்கு மாற முடியவில்லை.

Shubman Gill Demands 15-Day Red-Ball Camp After South Africa Test Whitewash

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள சுப்மன் கில், "இனி வரும் காலங்களில் ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் முன்பாகக் கட்டாயமாக 15 நாட்கள் சிவப்புப் பந்து பயிற்சி முகாம் நடத்தப்பட வேண்டும்" என்று பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிசிசிஐ-யின் நிலைப்பாடு

சுப்மன் கில்லின் இந்தக் கோரிக்கையை பிசிசிஐ சாதகமாகப் பரிசீலித்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு டெஸ்ட் அணியை வழிநடத்தும் கில், தற்போது ஒரு கேப்டனாகத் தனது அதிகாரத்தை உறுதியாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்.

"கில் தனது பார்வையில் தெளிவாக இருக்கிறார். அவருக்கு அணியைக் கட்டமைப்பதில் கூடுதல் சுதந்திரம் மற்றும் அதிகாரத்தை வழங்க பிசிசிஐ தயாராக உள்ளது. ரோகித் சர்மாவுக்குப் பிறகு ஒரு வலுவான தலைவர் அணிக்குத் தேவை, அந்தப் இடத்தை கில் நிரப்புவார்" என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பிஸியாக இருக்கும் காலங்களில், டெஸ்ட் போட்டிகளுக்கான சிறப்புப் பயிற்சி முகாம்களை தேசிய கிரிக்கெட் அகாமடி (NCA/CoE) தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையில் நடத்தவும்த் திட்டமிடப்பட்டுள்ளது.

2024-ல் நியூசிலாந்துக்கு எதிராகச் சொந்த மண்ணில் 'ஒயிட் வாஷ்' ஆனது, இப்போது 2025-ல் தென்னாப்பிரிக்காவிடமும் அதே கதி நேர்ந்துள்ளது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு இந்தியாவிற்கு மிகக் குறைவாகவே உள்ளது.

அடுத்ததாக ஜூலை 2026-ல் இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் இந்தியா மோதவுள்ளது. அதற்குள் அணியைச் சீரமைக்க கில்லின் இந்த '15 நாள் முகாம்' திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, January 5, 2026, 12:24 [IST]
Other articles published on Jan 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+