Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: மாபெரும் டெஸ்ட் ரெக்கார்டு.. ஒரு செஞ்சுரி அடித்தால் ஜோ ரூட்டை முந்துவார் சுப்மன் கில்

கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) கொழும்பில் தொடங்க உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பல முக்கியமான மைல்கற்களை எட்டி வரலாற்றுச் சாதனை படைக்கக் காத்திருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் (2025-27) அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர். கொழும்பு டெஸ்டில் கில் சதம் அடித்தால், இந்த சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கில் தனியாக முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனை படைப்பார்.

Shubman Gill Eyes Historic Milestones and WTC records in 2nd Test Against Sri Lanka in Colombo

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தற்போதைய தொடரில் 1000 ரன்களைக் கடக்க சுப்மன் கில்லுக்கு இன்னும் 26 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. அவர் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 69.57 சராசரியுடன் 974 ரன்கள் எடுத்துள்ளார். இத்தொடரில் ஜோ ரூட் (1174 ரன்கள்) மற்றும் ஹாரி புரூக் (1147 ரன்கள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக 1000 ரன்களைக் கடக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3000 ரன்களைக் கடக்க கில்லுக்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவை. அவர் இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 2993 ரன்கள் எடுத்துள்ளார். காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 16 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்களும் மட்டுமே எடுத்து கில் ஏமாற்றம் அளித்திருந்தார். இதனால் கொழும்பு டெஸ்டில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

டாப் 5 குறைந்த ஸ்கோர்.. இந்தியா எடுத்த 36 ரன்களை விட டெஸ்ட்டில் மிக மோசமாக ஆடிய 3 அணிகள்

டாப் 5 குறைந்த ஸ்கோர்.. இந்தியா எடுத்த 36 ரன்களை விட டெஸ்ட்டில் மிக மோசமாக ஆடிய 3 அணிகள்

முன்னதாக முதல் டெஸ்டில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இரண்டாவது டெஸ்டிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இலங்கைக்கு எதிரான இத்தொடரை வெல்வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இந்தியாவின் வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் இந்த இரண்டாவது போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Story first published: Sunday, August 23, 2026, 6:36 [IST]
Other articles published on Aug 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+