சச்சின் சொன்ன குறை.. பதிலடி தந்த சுப்மான் கில்.. வீதிக்கு வரும் காதல் பிரச்சினை
டிரிண்டாட்: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மான் கில் குறித்து சச்சின் டெண்டுல்கர் அண்மையில் கருத்து ஒன்றை வெளியிட்டார்.
Recommended Video
அதற்கு தற்போது சுப்மான் கில் பதிலடி தந்துள்ளார். சுப்மான் கில்லும் , சச்சினின் மகளுமான சாரா டெண்டல்கரும் காதலிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இருவரும் புத்தாண்டை ஒன்றாக கோவாவில் கொண்டாடியதாக புகைப்படங்களும் வெளிவந்தன. இது குறித்து சச்சின் தனது மகளை கண்டித்ததாகவும், ஆனால் அவர் தொடர்ந்து சும்மான் கில்லுடன் வெளியில் சுற்றுவதாகவும் செய்திகள் வெளி வந்தன.

சச்சின் விமர்சனம்
இந்த நிலையில் சுப்மான் கில் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த சச்சின், சுப்மான் கில் திறமையான வீரராக இருந்தாலும் அவர் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 20 , 30 ரன்களை அடித்து விட்டு அவர் அவுட் ஆகி விடுகிறார். அந்த இலக்கை பெரிதாக மாற்றினால் மட்டுமே அவரால் தொடர்ந்து அணியில் நீடிக்க முடியும் என்று விமர்சனம் தெரிவித்தார்.

புதிய நம்பிக்கை
இது சுப்மான் கில்லுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒரு நாள் தொடரில் சுப்மான் கில், அரை சதம் விளாசினார்.தனது பேட்டிங் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கிந்திய தீவுகள் தொடரில் தமக்கு கிடைத்த வாய்ப்பு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையும் அளித்திருக்கிறது. தற்போது நான் எடுக்கும் ரன்ளை பெரிய ஸ்கோர் ஆக மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறேன்.

காரணம் என்ன?
பந்து புதிதாக இருக்கும் போது ரன் குவிப்புக்கு சாதகமாக சூழல் நிலவுகிறது. பந்து கொஞ்சம் பழசாக மாறும் போது ரன்களை சேர்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது .இருப்பினும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ராத்தோரிடம் இது குறித்து பலமுறை பேசியிருக்கிறேன். ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் உலகம் முழுவதும் உள்ள ஆடுகளங்களில் விளையாடி பல அனுபவங்களை சேர்ந்திருக்கிறார்.

சச்சினுக்கு பதிலடி
அவருடைய அனுபவம் நிச்சயம் எனக்கு உதவும். பந்து பழசாகும்போது அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் டிராவிட்டிடம் பயிற்சி எடுத்து வருகிறேன். பேட்டிங் நுணக்கம் குறித்து விக்ரம் ராவுத்தோரிடம் பேசி இருக்கிறேன். இனிவரும் போட்டியில் பெரிய ஸ்கோர் அடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் சுப்மான் கில் பேட்டிங் குறித்து விமர்சனம் சொன்ன நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக தற்போது சுப்மான் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications