Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயிற்றில் பெரும் காயம்.. அவசர புத்தியால் சுப்மன் கில்லுக்கு நடந்த சம்பவம்.. இந்திய அணி சரிவு!

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியின் போது தேவையில்லாமல் மிகவும் அவசரப்பட்ட இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பின்னடைவு வந்துவிட்டதே என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அனைவரும் எதிர்பார்த்ததை போலவே ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுவிட்டு சுப்மன் கில் கொண்டு வரப்பட்டார்.

ரன் அவுட் பரபரப்பு

ரன் அவுட் பரபரப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி வழக்கம் போல நிதானமாக இன்னிங்ஸை தொடங்கினர். எனினும் இந்த முறை ரோகித்திற்கு அதிர்ஷ்டம் இல்லை. 12 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் சுப்மன் கில் பொறுப்பை ஏற்று நல்ல ஸ்கோருக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்த்தால், அவசர புத்தியால் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார்.

என்ன ஆனது

என்ன ஆனது

ஆட்டத்தின் 6.5 ஓவரின் போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை சட்டீஸ்வர் புஜாரா ஸ்கொயர் லெக் திசையில் அடித்துவிட்டார். அங்கு ஃபீல்டர் இருக்கிறார் என்பது அவருக்கும் தெரியும். இதுபோன்ற சூழலில் ஒரு அறிமுக வீரர் கூட ரன் ஓட நினைக்க மாட்டார். ஆனால் சுப்மன் கில் சிங்கிள் ஓட அழைத்து, அதிவேகமாக ஓடினார். ஆனால் பந்தும் கிட்டத்தட்ட ஸ்டம்பிற்கு வந்துவிட்டது.

பெரிய காயம்

பெரிய காயம்

அவுட்டா? இல்லையா? என ரசிகர்கள் பதற்றத்தில் இருந்த போது, சுப்மன் கில் டைவ் அடிக்க வயிற்று பகுதி முழுவதுமாக தரையில் உராசியது. அவர் அவுட்டாகாமல் தப்பித்த போதும், வயிற்று பகுதி முழுவதுமாக உராய்வு ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதனை பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். எனினும் இவ்வளவு கஷ்டப்பட்டு தப்பித்தும் சுப்மன் கில்லால் ஒரு ஓவர் கூட நிலைத்து நிற்க முடியவில்லை.

அடுத்த ஓவரில் ட்விஸ்ட்

அடுத்த ஓவரில் ட்விஸ்ட்

அடுத்த ஓவரிலேயே குஹ்னேமான் வீசிய பந்தில் 21 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் காயத்தால் தவித்து வந்த அவர்,கவனம் சிதறி தான் தவறான ஷாட்டால் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டார். கே.எல்.ராகுல் சொதப்புகிறார் எனக்கூறி பெரும் போராட்டத்திற்கு பின்னர் உள்ளே வந்த சுப்மன் கில் தனது அவசர புத்தியால் வாய்ப்பை கெடுத்துக்கொண்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, March 1, 2023, 10:43 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+