Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: சுப்மன் கில்லுக்கு காயம்.. முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா?

மும்பை: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரது வலைப் பயிற்சி அமர்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியின் போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து முழங்கையில் தாக்கியதில் கில் காயமடைந்தார்.

வலது கை பேட்டரான கில், பந்து தாக்கியவுடன் மைதானத்தில் இருந்து வெளியேறி அணியின் பிசியோதெரபிஸ்டிடம் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த காயம் குறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Shubman gill

ஒருவேளை கில் இந்த போட்டியில் விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக மாற்றுத் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க யஷஸ்வி ஜெய்ஸ்வால் தயாராக உள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் இந்திய டி20 அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவதால், இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி பேட்டிங் மோசமாக இருக்கிறது.. பவுலிங் பிட்சில் சுத்தமாக ஆட தெரியல.. வசீம் ஜாபர்

இந்திய அணி பேட்டிங் மோசமாக இருக்கிறது.. பவுலிங் பிட்சில் சுத்தமாக ஆட தெரியல.. வசீம் ஜாபர்

கடந்த மூன்று ஆண்டுகளில் ஷுப்மன் கில் பல்வேறு காயங்களாலும் உடல்நலப் பாதிப்புகளாலும் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வருகிறார். இது அவரது ஆட்டத்திறனைப் பலமுறை பாதித்துள்ளது. 2023 அக்டோபரில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது அவருக்கு ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

தொடர்ந்து 2024 நவம்பரில் ஏற்பட்ட கட்டைவிரல் காயம் காரணமாக பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் அவர் விளையாடுவதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், 2025 மற்றும் 2026 இடைப்பட்ட காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது அவருக்குப் பலத்த கழுத்து சுளுக்கு ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 2025 டிசம்பரில் அவருக்கு கால் விரலிலும் காயம் ஏற்பட்டது.

IND vs WI: ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் எந்த வீரர்கள் விளையாடுவார்கள்? 3 பேருக்கு வாய்ப்பு

Also Read

IND vs WI: ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் எந்த வீரர்கள் விளையாடுவார்கள்? 3 பேருக்கு வாய்ப்பு

இதன் தொடர்ச்சியாக, 2026 ஏப்ரல் மாத ஐபிஎல் தொடரின் போது மீண்டும் அவருக்கு கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டது. சமீபத்தில், 2026 ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது கடுமையான கால் தசைப்பிடிப்பு காரணமாக அவர் பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார். அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட கைவிரல் காயம் காரணமாக விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

Story first published: Saturday, September 26, 2026, 7:00 [IST]
Other articles published on Sep 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+