Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நட்சத்திர வீரர்.. புதிய சிக்கலில் சிக்கிய இந்திய அணி!

சென்னை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி நாளை மறுநாள் களமிறங்கவுள்ள நிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி கிங் என்று கொண்டாடப்பட்டால், இளம் வீரர் சுப்மன் கில் பிரின்ஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஜாம்பவான் வீரரான விராட் கோலியின் இடத்தில் சுப்மன் கில்லா என்று ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தான் விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் அந்த அடைமொழிக்கு நியாயம் சேர்த்து வருகிறார்.

Shubman Gill is suffering from Dengue Fever and Might Miss the Match against Australia in the World Cup 2023

இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில், 1,917 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் மொத்தமாக 6 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். அதில் நடப்பாண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரட்டை சதம் உட்பட 5 சதங்களை விளாசியுள்ளார். அதேபோல் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் 302 ரன்களை விளாசினார்.

இதனால் உலகக்கோப்பை தொடரில் மிகமுக்கிய வீரராக சுப்மன் கில் பார்க்கப்பட்டார். உலகக்கோப்பை தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நாளை மறுநாள் களமிறங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக நேற்று முன்தினமே இந்திய வீரர்கள் சென்னை வந்தனர்.

சென்னையில் களமிறங்கிய முதல் நாளிலேயே இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதிலும் நட்சத்திர வீரர் விராட் கோலி 45 நிமிடங்கள் கூடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடக்க வீரர் சுப்மன் கில் இந்திய அணியின் பயிற்சியில் ஈடுபடவில்லை. நேற்றும் சுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை. வழக்கமாக பயிற்சியை மிஸ் செய்யாத வீரர் சுப்மன் கில் தான் என்று ரோகித் சர்மா அண்மையில் கூறியிருந்தார்.

இதனால் சுப்மன் கில் பயிற்சியை தவறவிட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய நட்சத்திர வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையிலும் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் ஓய்வில் இருக்கிறார்.

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணி நிர்வாகம் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பாரா என்பது அக்.8ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, October 6, 2023, 8:51 [IST]
Other articles published on Oct 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+