Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மான் கில் முதல் அரைசதம்.. சச்சின் டெண்டுல்கர் சொன்ன குறை.. மீண்டும் செய்து காட்டிய கில்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுப்மான் கில் அரைசதம் விளாசினார்.

Recommended Video

IND vs WI Shubman Gill மோசமான Run Out ! அன்றே கணித்த Sachin *Cricket

சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கு சுப்மான் கில் அணிக்கு திரும்பினார்.

ஏற்கனவே இஷான் கிஷன், ருத்துராஜ் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில், சுப்மான் கில்லுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது.

பயமில்லாத ஆட்டம்

பயமில்லாத ஆட்டம்

ஷிகர் தவானுடன் களமிறங்கிய தவான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே கொஞ்சமும் கூட பயம் இல்லாமல் பவுண்டரிக்கு பந்தை கில் விரட்டினார். இதனைத் தெதாடர்ந்து ஆட்டத்தின் 3வது ஓவரில் அல்சாரி ஜோசப் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார் கில்.

முதல் அரைசதம்

முதல் அரைசதம்

இதனைத் தொடர்ந்து அடிக்க வேண்டிய பந்தை சுப்மான் கில் அடித்து ஆட, 36 பந்துகளில் எல்லாம் தனது முதல் அரைசதத்தை சுப்மான் கில் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதற்கு முன்பு 3 போட்டியில் நடுவரிசையில் இறங்கி மொத்தம் 49 ரன்கள் அடித்த சுப்மான் கில், தற்போது தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்.

கவனக்குறைவால் அவுட்

கவனக்குறைவால் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை கில் அசால்டாக எதிர்கொண்ட ரன்களை சேர்த்த போது, 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒரு மெகா தவறை செய்தார். அதாவது ஃபில்டருக்கு நேராக பந்தை அடித்து விட்டு சுப்மான் கில் ரன் அடிக்க முயன்றார். அதுவும் ஃபில்டர் பந்தை எடுக்க மாட்டார் என நினைத்து மெதுவாக ஓட தொடங்கினார்.

அன்றே சொன்ன சச்சின்

அன்றே சொன்ன சச்சின்

ஆனால் ஃபில்டர் பந்தை சரியாக எடுத்து ரன் அவுட் ஆக்கினார். ஒரே ஒரு கவன குறைவால், சுப்மான் கில் முதல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஏற்கனவே சுப்மான் கில் குறித்து பேசிய சச்சின், கவனக்குறைவால் தனத திறமையை பெரிய ஸ்கோர் அடிக்காமல் வீணடிப்பதாக சச்சின் கூறியதை, மீண்டம் கில் நிரூபித்துவிட்டார்.

Story first published: Friday, July 22, 2022, 22:01 [IST]
Other articles published on Jul 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+