Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்குள் இவரை கொண்டு வாங்க.. எல்லாம் சரி ஆகிடும்.. பிசிசிஐ குறி வைக்கும் 19 வயது வீரர்!

Recommended Video

Gill may get chance in team | இந்திய அணிக்குள் கில் : குறி வைக்கும் பிசிசிஐ- வீடியோ

லண்டன்: இந்திய அணிக்குள் 19 வயதே நிரம்பிய இளம் வீரர் ஒருவர் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையை சரி செய்வதற்காக இளம் வீரர் அணிக்குள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

உலகக் கோப்பை தொடர் முடிந்தும் கூட இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்சனை சரியானது போல தெரியவில்லை. இன்னும் மிடில் ஆர்டருக்கு யாரை தேர்வு செய்வது, எந்த வீரரை மிடில் ஆர்டரில் விளையாட அனுப்புவது என்று அணி நிர்வாகம் குழம்பி வருகிறது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கும் போட்டியில் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாட போவது யார் என்று கடுமையான கேள்விகள் எழுந்துள்ளது.

யார்

யார்

இந்த நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 19 வயது வீரரான சுப்மான் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இவர் தற்போது மேற்கு இந்திய தீவுகளில்தான் இந்திய ஏ அணிக்கு தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

இவர் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியிலேயே சென்ற வருடம் மிகவும் சிறப்பாக ஆடினார். அந்த தொடர் முழுக்க இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மான் கில் மிகவும் சிறப்பாக விளையாடினார். அதில் ஒரு போட்டியில் 59 பந்துகளில் 90 ரன் அடித்தார். இவர் மீது ராகுல் டிராவிட் நிறைய நம்பிக்கை வைத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

உலகின் முன்னணி வீரர்கள்

உலகின் முன்னணி வீரர்கள்

உலகின் பல முன்னணி வீரர் இவர் ஆட்டத்தை பார்த்துவிட்டு மிரண்டு போய் இருக்கிறார்கள். அந்த தொடரில் இவர் விக்கெட்டை வீழ்த்துவதே மற்ற அணிகளுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த தொடரில் இதன் காரணமாகவே இந்தியா இரண்டு முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தொடரில் இவர் 63, 32, 129, 0, 63, 90 என்று ரன் தாண்டவம் ஆடினார்.

கோலி என்ன சொன்னார்

கோலி என்ன சொன்னார்

இவரை குறித்து பேட்டி அளித்த கோலி கூட, எனக்கு அவரின் பயிற்சி ஆட்டங்களை பார்த்தால் வியப்பாக இருக்கிறது. நிறைய நுட்பங்களை அவர் கற்று வைத்துள்ளார். ஆச்சர்யமாக இருக்கிறது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அவரின் அதிரடி இந்திய அணிக்கு எதிர்காலத்தில் கண்டிப்பாக உதவும் என்று குறிப்பிட்டார்.

சிறப்பு இவர்

சிறப்பு இவர்

இந்த நிலையில் இவர் தற்போது மேற்கு இந்திய தீவுகளின் ஏ அணிக்கு எதிராக நடக்கும் இந்திய ஏ அணியின் போட்டியிலும் சிறப்பாக ஆடி வருகிறார். 70+ ரன்களை எல்லா போட்டியிலும் அடித்து வருகிறார். இவர் தற்போது இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி ஆடி வருகிறார். இவர் மிடில் ஆர்டரிலும் நன்றாக ஆட கூடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

இதனால் கில்லை அணியில் எடுத்து இப்போதே மெருகேற்றினால் இன்னும் நான்கு வருடங்களில் சிறந்த வீரராக மாறி இருப்பார். அதன்பின் 2023 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அவர் மிக முக்கியமான மிடில் ஆர்டர் வீரராக செயல்படுவார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, July 18, 2019, 14:39 [IST]
Other articles published on Jul 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+