Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA தொடரில் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு இல்லை..உடல் தகுதியுடன் இருந்தும் முடிவு..காரணம் என்ன?

மும்பை : இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

India vs South Africa Series-ல் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் ?

சுப்மான் கில் நல்ல உடல் தகுதியுடன் இருந்தும், நல்ல ஃபார்மில் இருந்தும் பிசிசிஐ எடுத்திருக்கும் முடிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது,

ஒரு வேலை சுப்மான் கில்லுக்கு பிசிசிஐ, எதாவது நடத்தை விதிகள் காரணமாக தண்டனை வழங்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்தது.

சுப்மான் கில் இல்லை

சுப்மான் கில் இல்லை

ஆனால், அது எதுவும் காரணம் கிடையாது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் சுப்மான் கில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு பதிலாக பிரித்வி ஷா அல்லது ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்றும் தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமமும் ஒன்று உண்டு.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

சுப்மான் கில், தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதனால் எவ்வித முக்கியத்துவம் இல்லாத தென்னாப்பிரிக்க தொடருக்காக அவரை அழைத்து, சுப்மான் கில்லிற்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை வீணடிக்க தேர்வுக்குழு விரும்பவில்லை.

கவுண்டி கிரிக்கெட்

கவுண்டி கிரிக்கெட்

சச்சின் , வசீம் அக்ரம் உள்ளிட்ட ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய பிறகே, தங்களுக்குள் பெரிய மாற்றம் எற்படுத்தியதாக கூறி உள்ளனர். ஆனால், அப்போது உள்ள வீரர்கள் தொடர்ந்து நாட்டுக்காக விளையாடுவதால், கவுண்டியில் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. தற்போது டி20 உலக கோப்பை காரணமாக ஒரு மாதம் சுப்மான் கில், முகமது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தேர்வுக்குழு முடிவு

தேர்வுக்குழு முடிவு

ஏற்கனவே முகமது சிராஜ் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரை அழைக்கவில்லை என்று ரோகித் சர்மா கூறினார். இதனால் சுப்மான் கில்லையும் தேர்வுக்குழுவினர் 3 போட்டிக்காக அழைக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மான் கில் நேற்று கவுண்டிகிரிக்கெட்டில் 102 பந்துகளை எதிர்கொண்டு 91 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 27, 2022, 14:39 [IST]
Other articles published on Sep 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+