இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாகும் சுப்மன் கில்.. சூர்யகுமார் யாதவ் பதவிக்கு ஆபத்து..காரணமே இதான்
மும்பை: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்க படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றிருந்தார். இதன் காரணமாக சூரியகுமார்யாதவும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சூரியகுமார் தலைமையில் இந்திய அணி பல தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறது. வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் சூரியகுமார் தலைமையிலான அணி வெற்றி பெற்று இருக்கிறது.

இதனால் அவர் 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரை கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டார். அது மட்டும் இல்லாமல் தொடரையும் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தார்.
இதனால் கில் உடைய இமேஜ் பிசிசிஐ மத்தியில் பெருமளவு உயர்ந்திருக்கிறது. இந்த தருணத்தில் சூரியகுமார் யாதவுக்கு தற்போது ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் சில நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் தற்போது தான் உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஹெரனியா ஆபரேஷனுக்கு பின் சூரியகுமார் யாதவால் சரியாக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அவர் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட முடியுமா? அவருடைய உடல் தகுதி அதற்கு இடம் கொடுக்குமா? தொடர்ந்து சூரிய குமார் யாதவால் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியுமா என பல கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் டி20 அணியில் கில்லுக்கு கடந்த சில தொடராக இடம் கிடைப்பதில்லை இதனால் தில்லை மீண்டும் அணியில் சேர்த்து அவரை கேப்டனாக மாற்ற பிசிசிஐ முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. ஒருவேளை கில்லுக்கு டி20 கேப்டன் பதவி வழங்கினால் ஒரு நாள் போட்டிக்கும் அவரையே கேப்டன் ஆகவும் மாற்றம் முயற்சியும் நடக்கும். எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிரிக்கெட் வல்லுனர்கள் சூரியகுமார் கேப்டனாக தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications