Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் Vs சூர்யகுமார் - யாருக்கு முதல் டெஸ்ட்டில் வாய்ப்பு.. ரோகித் முன் உள்ள 4 வழிகள்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் யாரை சேர்ப்பது? யாரை விடுவது என்று குழப்பத்தில் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இருக்கிறார்கள்.

தொடர்ந்து சிறப்பாக சுப்மன் கில் விளையாடி வருவதால் அவருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அவரை அணியை விட்டு நீக்குவதும் இயலாத காரியம். இதேபோன்று நடு வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் அந்த இடத்தில் யார் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

இதனால் ஜடேஜாவை வைத்து நான்கு சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்குமா இல்லை நடுவரிசையில் சூரிய குமார்யாதவ் அல்லது சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு தருமா என்பதை தற்போது பிரச்சனைக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. கே எல் ராகுல் அணியில் துணை கேப்டன் என்பதால் அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க 99 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.

ராகுல் ஃபார்ம்

ராகுல் ஃபார்ம்

எனினும் கே எல் ராகுலின் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்ம் மோசமான அளவில் இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடிய நிலையில் அதில் மொத்தமாகவே அவர் 22, 23, 10, 2 ஆகிய ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். இதனால் ராகுலை அணியில் சேர்ப்பது பெரிய ரிஸ்க் என கருதப்படுகிறது. எனினும் கே எல் ராகுல் திறமையான பேட்ஸ்மேன் என்பது சந்தேகமே இல்லை. எப்போதெல்லாம் அவர் மீது நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பெரிய இன்னிங்ஸ் ஆடி தனது இடத்தை காப்பாற்றிக் கொள்வார்.

சுப்மன் கில்

சுப்மன் கில்

இதனால் கே எல் ராகுல், ரோகித் சர்மாவின் ஜோடியாக விளையாடுவதில் சந்தேகம் இருக்காது. இந்த நிலையில் கே எல் ராகுல் தொடக்க வீரராக இருந்தால் சுப்மன் கில் நடு வரிசையில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. சுப்மன் கில், தற்போது அவர் வாழ்நாளில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். டி20 ஒருநாள் என அனைத்திலும் சதம் விளாசியும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கான வாய்ப்பை கொடுத்தால் தான் அதில் அவரால் சாதிக்க முடியும்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இதனால் சுப்மன் கில்லை நடுவரிசையில் விளையாட வைப்பதில் தவறு ஏதுமில்லை. இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் நடுவரிசையில் அதிரடி வீரர் ஒருவர் தேவை என்றால் சூரியகுமார் யாதவை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும். அப்படி சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் இடம் பெற்றால் கே எல் ராகுலுக்கு அணியில் இடம் வழங்கக் கூடாது. ஏனென்றால் ராகுல் ,சூரிய குமார் யாதவ் இரண்டு பேருமே தங்களது டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மை நிரூபிக்கவில்லை.

Story first published: Wednesday, February 8, 2023, 16:13 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+