Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு குட் நியூஸ்.. பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் ஆடியதால் ரசிகர்கள் நிம்மதி

கொழும்பு: இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில், காயம் காரணமாக முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யாத இந்திய கேப்டன் சுப்மன் கில், 2வது இன்னிங்ஸில் களம் இறங்கி பேட்டிங் செய்தார். இது இந்திய அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கிடையே கொழும்பில் நடக்கும் 3 நாள் பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் லெவன் அணியை இந்தியா எதிர்கொண்டு ஆடியது. கடந்த வியாழக்கிழமை நடந்த வலைப்பயிற்சியின் போது சுப்மன் கில்லின் வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவில்லை.

Shubman Gill recovers from finger injury Bats in 2nd Innings of Sri Lanka Warm-Up match

ஏற்கனவே சாய் சுதர்சன், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் இத்தொடரில் ஆட முடியாத நிலையில், கேப்டன் சுப்மன் கில்லின் காயம் அணிக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்போட்டியின் 3வது நாளில் இலங்கை அணி தனது 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணியில் நிஷான் பெர்னாண்டோ 63 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் குர்னூர் பிரார், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதை அடுத்து இந்திய அணிக்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன் மூலம் கில்லின் காயம் தீவிரமானது அல்ல என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. காயம் குறித்து கவலைப்படாமல் ஆடிய சுப்மன் கில், விரைவாக ரன் சேர்த்தார். ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன நிலையில் 2வது இன்னிங்க்ஸில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து இருந்த போது ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து வெளியேறினார். அடுத்து ரிஷப் பண்ட் உடன் சேர்ந்து சுப்மன் கில் ரன் குவித்தார். 54 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த சுப்மன் கில் கேஷரா நுவாந்தா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

விவிஎஸ் லக்ஷ்மனுடன் பிசிசிஐ அவசர மீட்டிங்.. எல்லை மீறிப் போன நிலைமை.. 10 வீரர்களுக்கு காயம்

விவிஎஸ் லக்ஷ்மனுடன் பிசிசிஐ அவசர மீட்டிங்.. எல்லை மீறிப் போன நிலைமை.. 10 வீரர்களுக்கு காயம்

வரும் ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. சாய் சுதர்சனுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஒரு பிரஸ்மீட்.. ஆட்டம் குளோஸ்.. இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர் இனி நடக்க வாய்ப்பு இல்லை

Also Read

ஒரே ஒரு பிரஸ்மீட்.. ஆட்டம் குளோஸ்.. இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர் இனி நடக்க வாய்ப்பு இல்லை
Story first published: Sunday, August 9, 2026, 15:28 [IST]
Other articles published on Aug 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+