For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் வாழ்க்கையில் பாலிவுட் நடிகை விளையாடுகிறார்.. சுப்மான் கில் பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை : பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா தொடர்ந்து ரிஷப் பண்டின் கவனத்தை சிதைக்கும் வகையில் நடந்து கொள்வதாக கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழில் தி லெஜன்ட் திரைப்படத்தில் நடித்துள்ள ஊர்வசி ரவ்தெலா பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தம்மை காண பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் 10 மணி நேரம் காத்திருந்ததாக கூறினார்.

கவனம் செலுத்து

கவனம் செலுத்து

மேலும் தம்மை தொடர்பு கொள்ள 15, 16 முறை மிஸ் கால் கொடுத்ததாகவும் ஊர்வசி ரவ்தெலா கூறினார். அந்த கிரிக்கெட் வீரர் பெயர் மிஸ்டர் ஆர்பி என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த ரிஷப் பண்ட் சிலர் வீண் விளம்பரத்திற்காக இப்படி பொய் சொல்லி திரிவதாக பதிலடி கொடுத்திருந்தார்.இதனால் கடுப்பான ஊர்வசி சின்னத்தம்பி கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

இதயத்தை தேடி

இதயத்தை தேடி

நான் அமைதியாக இருப்பதால் என்னை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட, இருவருக்கும் இடையேயான பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் சில காலத்திற்குப் பிறகு ரிஷப் பண்டிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக ஊர்வசி ரவ்தெலா பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.அதன் பிறகு ரிஷப் பண்ட், டி20 உலக கோப்பை தொடர்பாக ஆஸ்திரேலியா சென்ற நிலையில் தாமும் தனது இதயத்தை தேடி ஆஸ்திரேலியா செல்வதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் .

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இதனால் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறி ரசிகர்கள் ரிஷப் பண்டை வெளிப்படையாக கிண்டல் செய்து வந்தனர். தற்போது இந்த விவகாரம் குறித்து சக இந்திய அணி வீரர் சுப்மான் கில்லிடம் கேள்வி எழுப்பப்பட்டது.ரிஷப் பண்டின் விவகாரம் குறித்து சக வீரர்கள் என்ன சொன்னீர்கள்? ட்ரெஸ்ஸிங் ரூமில் அதைப் பற்றி விவாதித்தீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுப்மான் கில், இந்த விவகாரத்தில் ரிஷப் பண்ட்க்கு எவ்வித சம்பந்தமே இல்லை.

 தவறு இல்லை

தவறு இல்லை

ரவ்தெலா ரிஷப் பண்டின் கவனத்தை சிதறும் வகையில் நடந்து கொண்டார். ஆனால் பண்ட், அது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. எனக்கு தெரிந்து அவரைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக ஊர்வசி ரவ்தெலா இப்படி செய்திருக்கலாம் என்று வெளிப்படையாக கூறினார். தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய சுப்மான் கில், நான் தற்போது பாலிவுட் நடிகை சாரா அலிகான் உடன் டேட்டிங் செய்வதாக கூறியுள்ளார். தற்போது சுப்மான் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்காக விளையாடுகின்றனர்.

Story first published: Sunday, November 20, 2022, 11:36 [IST]
Other articles published on Nov 20, 2022
English summary
Shubman gill reveals about the Rishabh pant - urvashi saga ரிஷப் பண்ட் வாழ்க்கையில் பாலிவுட் நடிகை விளையாடுகிறார்.. சுப்மான் கில் பரபரப்பு குற்றச்சாட்டு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+