Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குஜராத் டைட்டன்ஸ் கேப்டனுக்கு 'டாட்டா பை பை' சொன்ன சாரா டெண்டுல்கர்.. பாலிவுட் நடிகருடன் காதல்?

மும்பை: இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராகவும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கும் சுப்மன் கில், சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கருடன் காதலில் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. அது குறித்து இருவரும் உறுதி செய்யாதபோதும், வெளியிடங்களில் அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன.

அவர்கள் இருவரும் அடுத்த கட்டத்திற்குச் சென்று திருமண அறிவிப்பை வெளியிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கு இடையே சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

Shubman Gill Sara Tendulkar IPL IPL 2025 IPL offbeat

இந்த செய்திகள் வெளியான அதே சமயம், வர்ணனையாளரான டேனி மோரிசன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய போட்டி ஒன்றின் போது, சுப்மன் கில்லிடம் "'நீங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகினவே?'" என வேடிக்கையாகக் கேட்டார். அதற்கு சுப்மன் கில், "'அப்படி எதுவும் இல்லை'" என விளக்கம் அளித்திருந்தார். அப்போதே சாரா டெண்டுல்கரை சுப்மன் கில் பிரிந்து விட்டார் என செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தான், சாரா டெண்டுல்கர் அடுத்து பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதியுடன் டேட்டிங்கில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சித்தாந்த் சதுர்வேதி இதற்கு முன் அமிதாப் பச்சனின் பேத்தியான நவ்யா நவேலி நந்தாவுடன் டேட்டிங் செய்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருந்தன. ஆனால் அவரையும் சித்தாந்த் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்து அவர் சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஃபிலிம்ஃபேர் இதழில் இது குறித்த செய்தி வெளியாகி உள்ளது. அதில் சாரா டெண்டுல்கர் மற்றும் சித்தாந்த்துக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இது பற்றிப் பேசியிருக்கிறார். "சித்தாந்த் மற்றும் சாரா இப்போதுதான் நண்பர்களாகப் பழகத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, இது போன்ற செய்தி வருவதை அவர்கள் இருவரும் விரும்பவில்லை. அதே சமயம் அவர்களது அழகான உறவு குறித்து நான் எதையும் சொல்ல விரும்பவில்லை'" என்று கூறியிருக்கிறார். சித்தாந்த் சதுர்வேதிக்கு 32 வயதாகிறது. சாரா டெண்டுல்கருக்கு 27 வயதாகிறது.

Story first published: Sunday, May 4, 2025, 11:10 [IST]
Other articles published on May 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+