Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப சொல்லுங்க? என்னை டீம்ல எடுக்க மாட்டீங்களா.. வெ.இண்டீஸில் வெறியாட்டம் ஆடி சாதித்த இளம் வீரர்!

Recommended Video

Shubman Gill : இந்திய அணியில் இடமில்லை... புலம்பு இளம் வீரர் - வீடியோ

டரூபா : இந்திய அணியில் இடம் கிடைக்காத இளம் வீரர் இந்தியா ஏ அணிக்காக ஆடிய போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார்.

உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஷுப்மன் கில்லுக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்தியா ஏ அணியில் கிடைத்த வாய்ப்பில் அதிரடி காட்டி, சாதனை படைத்து தனக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என பேட்டால் கேட்டு இருக்கிறார் ஷுப்மன் கில்.

ஐபிஎல் ஆட்டம்

ஐபிஎல் ஆட்டம்

2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார் 19 வயதே ஆன ஷுப்மன் கில். அதற்கு முன்பு அண்டர் 19 அணியிலும் அசத்தலாக ஆடினார். அப்போதிருந்தே ஷுப்மன் கில் எப்போது இந்திய அணியில் இடம் பெறுவார் என்ற கேள்வி எழுந்தது.

ஷுப்மன் கில் இல்லை

ஷுப்மன் கில் இல்லை

உலகக்கோப்பை தொடருக்கு பின் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டது. அதே போல, ஸ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, கலீல் அஹ்மது ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். ஆனால், ஷுப்மன் கில்லுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை.

சோகத்தில் கில்

சோகத்தில் கில்

இதற்கு முன் நியூசிலாந்து தொடரில் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது மறுக்கபட்டது ஏன் என்றே புரியாத நிலையில், சோகத்தில் இருந்தார் கில். பேட்டியில் கூட தன் வருத்தத்தை வெளிப்படுத்தி பேசி இருந்தார்.

மின்னல் வேகம்

மின்னல் வேகம்

இரட்டை சதம் என்றால் நின்று நிதானித்து அடித்த இரட்டை சதம் அல்ல. முதல் தர டெஸ்ட் போட்டியில் 248 பந்துகளில் 204 ரன்கள் குவித்தார் என்றால் என்ன வேகம் என பார்த்துக் கொள்ளலாம். 19 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார்.

கம்பீர் சாதனை காலி

கம்பீர் சாதனை காலி

இந்த இரட்டை சதம் மூலம் முதல் தர போட்டிகளில் இந்திய அளவில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக இந்த சாதனையை செய்த வீரர் கௌதம் கம்பீர். அவர் 20 வயது 124 நாட்களில் இந்த சாதனையை செய்தார். கில் 19 வயது 334 நாட்களில் இரட்டை சதம் அடித்து அதை முறியடித்தார்.

அணியில் இடம் கிடைக்குமா?

அணியில் இடம் கிடைக்குமா?

தன் பேட்டால் தனக்கு அணியில் இடம் உண்டா? இல்லையா? என தில்லாக கேட்டுள்ளார் ஷுப்மன் கில். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இனி அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றாலும், அடுத்து வரும் தென்னாப்பிரிக்க தொடரில் அவர் இடம் பெற வாய்ப்பு உண்டு.

Story first published: Friday, August 9, 2019, 22:18 [IST]
Other articles published on Aug 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+