Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு பிசிசிஐ வாய்ப்பு.. பிரித்வி ஷா, சர்பிராஸ் கானுக்கு நோ சான்ஸ்

மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது .

இந்தத் தொடரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் அணியில் சும்மான் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சொதப்பிய சுப்மான்

சொதப்பிய சுப்மான்

கடைசியாக 2020 ஆம் ஆண்டு சுப்மான் கில் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடினார் . அதன் பிறகு காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்த சுப்மான் கில், சச்சின் மகளுடன் டேட்டிங் செல்வதாக தகவல் வெளியானது . இந்த நிலையில் சுப்மான் கில்லுக்கு இந்திய டெஸ்ட் அணியில் ஓபனிங் வாய்ப்பு வழங்கப்பட்டது அதிலும் சுப்மான் பெரிதாக சாதிக்கவில்லை.

எதிர்பாராத வாய்ப்பு

எதிர்பாராத வாய்ப்பு

இதனை அடுத்து அவரது இடம் கே.எல். ராகுலுக்கு சென்றது. தற்போது கே. எல். ராகுலும் காயம் காரணமாக விலகியதால் சுப்மான் கில்லுக்கு சம்பந்தமே இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சுப்மான் கில் இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பி இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கத்தை தந்தார் . இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒரு நாள் போட்டியில் சுப்மான் கில் இடம் பெற்றுள்ளார்.

தேவையே இல்லை

தேவையே இல்லை

ஒரு நாள் அணியில் ஏற்கனவே ஷிக்கர் தவான், இசான் கிஷன், ருத்ராஜ் கெய்க் வாட் போன்ற வீரர்கள் ஓப்பனிங் இடத்துக்காக அணியில் உள்ளனர். பேட்டிங்கின் நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் , சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களும் உள்ளனர். இப்படி இருக்க தேவையே இல்லாமல் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கியதன் பின்னணி என்ன என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Recommended Video

IND vs ENG 1st T20: எப்படி இருக்கும் Predicted Playing 11? | Aanee's Appeal | *Cricket
இரட்டை நிலைப்பாடு

இரட்டை நிலைப்பாடு

இதேபோன்று இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி ஆறு சதங்கள் அடித்துள்ள சர்ப்ராஸ் கானுக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. ஏற்கனவே தொடக்க வீரராக அறியப்பட்ட பிரதிவிஷாவுக்கும் தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிரித்விஷா உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 50 ரன்களை அடித்துள்ளார்.ஸ்ட்ரைக் ரேட் 125 வைத்துள்ளார். இவ்விருவருக்கும் வாய்ப்பு வழங்காமல் சுப்மான் கில்லுக்கு தேர்வு குழு உறுப்பினர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, July 6, 2022, 19:38 [IST]
Other articles published on Jul 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+