"கப்பாவில்" ஆஸி.யை கதற வைத்த இந்திய படை.. 33 வருட ரெக்கார்டை காலி செய்த இளம் படை.. மாஸ் வெற்றி
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் கப்பா மைதானத்தில் தோல்வி அடைந்தது இல்லை என்ற 33 வருட சாதனையை ஆஸ்திரேலியா இழந்துள்ளது. .
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்று அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது.
பிரிஸ்போனில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது.

எப்படி
அதன்பின் இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் ஆஸி. 294 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 327 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை நோக்கி இந்திய அணி அதிரடியாக ஆடி வருகிறது.

கடைசி நாள் ஆட்டம்
4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சுப்மான் கில் அதிரடி பேட்டிங் செய்து வருகிறது. இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரோஹித் சர்மா அவுட் ஆனார். வெறும் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மா அவுட் ஆனார்.

சுப்மான் கில்
ஆனால் அதன்பின் சுப்மான் கில் பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடினார். நிதானமான ஆட்டம் மூலம் சுப்மான் கில் இந்த தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை அடித்தார். 91 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சுப்மான் கில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய புஜாரா காயத்தோடு அதிரடியாக ஆடி 56 ரன்கள் எடுத்தார்.

புஜாரா
புஜாரா வெற்றிபெற்ற பின்பும் கூடா தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த பண்ட் 80 ரன்களை கடந்து இந்தியாவை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். இடையில் களமிறங்கிய வாஷிங்க்டன் சுந்தர் 22 ரன்களை அதிரடியாக எடுக்க இந்திய அணி 319 ரன்களை எடுத்து திரில்லிங் வெற்றிபெற்றது.


Click it and Unblock the Notifications