Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: மின்னல் வேகத்தில் சென்ற பந்து.. கண் இமைக்கும் நேரத்தில் சுப்மன் கில் செய்த மேஜிக்

காலே: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் பறந்து பிடித்த அபாரமான கேட்ச் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கில்லின் இந்த அபாரமான ஆட்டத்தைக் கண்டு முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வியப்பில் ஆழ்ந்துள்ளார். எட்டாத உயரத்தில் சென்ற பந்தை கில் மிக லாவகமாகப் பிடித்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் முகமது சிராஜ் மற்றும் மானவ் சுதார் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தனர். இதன் பின்னர், கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்திய ஷுப்மன் கில், எக்ஸ்ட்ரா கவர் திசையில் பறந்து ஒரு கையில் கேட்ச் ஒன்றை எடுத்தார். இதனால் இலங்கை அணி 4வது விக்கெட்டை இழந்து தடுமாறியது.

Shubman Gill

குல்தீப் யாதவ் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் இந்த விக்கெட் வீழ்ந்தது. கமிந்து மெண்டிஸ் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையை நோக்கி தூக்கி அடித்தார். பந்து சற்று உயரமாகச் சென்ற நிலையிலும், ஷுப்மன் கில் தனது இடதுபுறமாக காற்றில் பாய்ந்து, ஒற்றைக் கையில் அதனைப் பிடித்து அசத்தினார்.

இந்த கேட்ச் குறித்து பேசிய வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் "அவரால் இந்த கேட்ச்சை பிடித்திருக்கவே முடியாது. பந்து கில்லிடம் அப்பாற்பட்ட தூரத்தில் தான் இருந்தது. பேட்ஸ்மேன் கூட இது காற்றில் சென்றாலும் எட்டாத தூரத்தில் தான் விழும் என்று நினைத்திருப்பார். அந்த திசையில் நாம் காணக்கூடிய மிகச்சிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்று" என வெகுவாகப் பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் விக்கெட் வேட்டையில் இணைந்து இலங்கை அணியின் கேப்டன் தனஞ்சய டி சில்வாவை 21 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். ஜடேஜா வீசிய பந்தில் எட்ஜ் ஆகி சென்ற பந்தை ஸ்லிப் திசையில் நின்றிருந்த கேஎல் ராகுல் பிடித்து அசத்தினார்.

ஓரளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த ஆடுகளத்திலும், இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களின் சுழல் மற்றும் வேகப்பந்துவீச்சால் இலங்கைக்கு கடும் சவால் அளித்து ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளைச் சரித்தனர்.

Story first published: Monday, August 17, 2026, 13:35 [IST]
Other articles published on Aug 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+