Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரட்டை சதம் குறித்து யோசிக்கவே இல்லை.. என்னுடைய பிளானே வேறு.. 'ஆட்டநாயகன்' சுப்மான் கில் கருத்து

ஐதராபாத் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மான் கில், இரட்டை சதம் விளாசினார்.

இதன் மூலம் இந்திய அணி 349 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்த இந்த நிலையில் இந்திய அணி பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால், நியூசிலாந்து அணி 337 ரன்கள் வரை குவித்து அதிர்ச்சி அளித்தது .

திட்டமிட்டேன்

திட்டமிட்டேன்

இரட்டை சதம் விளாசிய சுப்மான் கில் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம். இன்றைய ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்ய மிகவும் ஆவலுடன் இருந்தேன். அதிரடியாக விளையாட வேண்டும் என முன்பே திட்டமிட்டு இருந்தேன். என்னைச் சுற்றி விக்கெட்டுகள் விழும் போது நான் ரன் குவிக்க வேண்டும் என நினைத்தேன்.

ஆதிக்கம் செலுத்தினேன்

ஆதிக்கம் செலுத்தினேன்

அதனை செய்ய முடிந்தது நினைத்து மகிழ்ச்சி அளிக்கிறது. சில சமயம் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும்போது நீங்கள் திரும்பி அடிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நெருக்கடியை உணர்வார்கள். டாட் பந்துகளை குறைக்க வேண்டும். அதனை தவிர்ப்பதற்காக பில்டர்கள் இல்லாத திசையை பார்த்து ரன்கள் சேர்க்க நினைத்தேன் .

47வது ஓவரில் நினைத்தேன்

47வது ஓவரில் நினைத்தேன்

நிச்சயமாக இரட்டை சதம் குறித்து நான் யோசிக்கவே இல்லை. 47 வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடிக்கும் போது தான் என்னால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தோன்றியது. அதற்கு முன்பு வரை வர பந்தை அடித்து ரன் எடுத்தேன். இஷான் கிஷன் இடத்தில் நான் விளையாடினேன். ஆனால் அவர் என்னுடைய நண்பர். அவர் இரட்டை சதம் விளாசும் போது நான் அங்கு தான் இருந்தேன். நாம் ஒரு விஷயத்தை செய்ய நினைப்போம்.

குறிக்கோள்

குறிக்கோள்

அது நடந்து விட்டால் நமக்கு ஒரு விதமான உணர்வு மனதிற்கு ஏற்படும். தற்போது தொடர்ந்து இதே போல் விளையாடி இந்தியாவுக்கு வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். இதை செய்யும்போது திருப்தியாக இருக்கிறது .நான் இரட்டை சதம் அடித்த பிறகு நியூசிலாந்து இவ்வளவு அருகே வர மாட்டார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் ஆட்டம் தலைக் கீழ் மாறியது என்று சுப்மான் கில் கூறினார்.

Story first published: Wednesday, January 18, 2023, 23:27 [IST]
Other articles published on Jan 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+