மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள சுப்மன் கில், தமது 2 ரோல் மாடல்கள் குறித்து பேசியுள்ளார். சுனில் கவாஸ்கர் இந்தியாவின் முதல் பேட்டிங் சூப்பர் ஸ்டாராக இருந்தார். அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்றவர்கள் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளின் சுமையை சுமந்தனர்.
இந்தியாவின் அடுத்த பேட்டிங் ஸ்டாராக புகழப்படும் ஷுப்மன் கில், சமீபத்திய பேட்டி ஒன்றில், சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசியுள்ளார். வெளிப்படுத்தினார். இந்தியாவின் டி20 துணைக் கேப்டன், மாஸ்டர் பிளாஸ்டர் தனது தந்தையின் பிடித்த கிரிக்கெட் வீரராக இருந்ததாகவும், அதனாலேயே தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதாகவும் கூறினார்.

"எனக்கு இரண்டு ரோல் மாடல்கள் இருந்தனர். முதலாவது சச்சின் டெண்டுல்கர். அவர் என் அப்பாவுக்கு பிடித்தவர், அவரால் தான் நான் கிரிக்கெட்டுக்கு வந்தேன். அவர் 2013-ல் ஓய்வு பெற்றார். 2011-2013 காலகட்டத்தில் நான் கிரிக்கெட்டை உண்மையாகப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். திறமைகள் மட்டுமல்ல, விளையாட்டின் மனநிலை மற்ற அம்சங்களையும், புரிந்து கொண்டேன் "
"அந்த நேரத்தில் நான் விராட் கோலியை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தேன். அவர் தனது வேலையைச் செய்யும் விதம், விளையாட்டின் மீது அவருக்கு இருந்த தீவிர ஆர்வம், அவரது பசி ஆகியவற்றைப் பார்க்க நான் விரும்பினேன். நீங்கள் எல்லா திறமைகளையும், தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
"ஆனால் பசி என்பது உங்களிடம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்தது. விராட்டிடம் அது மிகுதியாக இருந்தது. அது என்னை உண்மையாக ஊக்கப்படுத்தியது" என்று அவர் கூறினார். இதனிடையே, சச்சினின் மகள் சாரா டெண்டுல்கரை கில் காதலிப்பதாக அண்மையில் கூறப்பட்டது. ஆனால், இதற்கு சச்சின் குடும்பத்தினர் ஒப்புகொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், கில்லின் இந்த பேட்டியை குறிப்பிட்டு வருங்கால மாமனாரா ரோல் மாடலாக ஏற்று கொண்டு இருக்கிறீர்களா என்று ரசிகர்கள் சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.
நடந்து வரும் ஆசிய கோப்பையில் ஷுப்மனுக்கு முக்கியமான பங்கு இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவின் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக, கில் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியாவின் அடுத்த போட்டி, பரம் எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக, செப்டம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.