
சுப்மன் கில் டேட்டிங்
இந்நிலையில் இவர் காதலிப்பதாக கூறி புதிய தகவல் கசிந்துள்ளது. சுப்மன் கில் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் இருவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒன்றாக உணவு அருந்தியுள்ளனர். மேலும் இருவரும் ஒன்றாக ஊர்சுற்றி டேட்டிங் செய்ததாக தெரிகிறது. இதனால் இவர்கள் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.

கிரிக்கெட் குடும்பம் தான்
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சையிஃப் அலிகானின் சகோதரியான சாரா அலிகானும், கிரிக்கெட் குடும்பத்தை சேர்ந்தவர் தான். இந்திய அணியின் முன்னாள் வீரர் மன்சூர் அலி கான் படோடியின் பேத்தி தான் சாரா அலிகான் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு நடிகர் கார்த்திக் ஆர்யானுடன் காதலில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் 2020ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

2வது காதலா?
இதுஒருபுறம் இருக்க, சுப்மன் கில்லுக்கும் இது 2வது காதலியாக இருக்கும். ஏனென்றால் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரும் சுப்மன் கில்லும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகின. இருவரின் இன்ஸ்டா பதிவுகளும் அதனை உறுதி செய்தது. எனினும் சாரா நடிப்பின் பக்கம் திரும்ப, சுப்மன் கில்லும் அவரை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்.

கிண்டலடிக்கும் ரசிகர்கள்
இந்த சூழலில் தான் சாரா டெண்டுல்கருடன் சுற்றி வருகிறார். முன்பு சாரா டெண்டுல்கர், தற்போது சாரா அலி கான் என சாரா என்ற பெயரை சுப்மன் கில் விடவே மாட்டார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் சுப்மன் கில் இடம்பெறவில்லை. எனினும் இதன் பின் வரவுள்ள ஆஸ்திரேலிய தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











