Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: சாம்சன் புகைப்படத்தை நீக்கிவிட்டு இந்திய அணிக்கு வாழ்த்து சொன்னாரா சுப்மன் கில்?

மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இப்போட்டிக்கு பின், வெற்றியைக் கொண்டாடி ஷுப்மன் கில் வெளியிட்ட சமூக வலைத்தளப் புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

'தொடரின் நாயகன்' விருதை வென்ற கேரள வீரர் சஞ்சு சாம்சன் அப்படத்தில் இடம்பெறவில்லை. சாம்சனின் சிறப்பான ஆட்டத்தால் ஏற்பட்ட பொறாமையே இதற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டினர். யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பகிர்ந்த இதேபோன்ற படத்திலும் சாம்சன் இல்லாதது விவாதத்தை அதிகப்படுத்தியது.

இந்திய டி20 அணியில் முன்னதாக துணை கேப்டனாக சுப்மன் கில் சேர்க்கப்பட்டார். அப்போது, சஞ்சு சாம்சனுக்கு நடுவரிசையில் இடமும், பின்னர் அணியிலும் இடமில்லாமல் போனது. ஆனால், கில் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை என்பதால், அவர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் மூலம் சஞ்சு சாம்சனின் இடம் உறுதியானது. இதே போன்று ஜெய்ஸ்வாலுக்கும் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதனால் ஏற்பட்ட பொறாமையில் சாம்சன் புகைப்படம் இல்லாமல் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளனர். ஆனால், உண்மையில் சாம்சனை அவர் வேண்டும் என்றே நீக்கவில்லை. வெற்றி கொண்டாடத்தின் போது, சாம்சன் கின்னால் நின்றதால், அவர் முன்னால் நின்ற வீரர்களால் மறைக்கப்பட்டு இருக்கிறார். இது தற்செயலானது என்பதால், வேண்டம் என்றே கில் இந்தப் புகைப் படத்தை பதிவிடவில்லை.

இறுதிப் போட்டியில், சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்தார். அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் இஷான் கிஷன் 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தனர். சிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்துக்கு ஜேம்ஸ் நீஷாம் 4 ஓவரில் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மாட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டிம் செய்ஃபர்ட் 26 பந்துகளில் 52 ரன்கள், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சில், ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவரில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அக்சர் படேல் 3 ஓவரில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, அபிஷேக் ஷர்மா தலா ஒரு விக்கெட் எடுக்க, அர்ஷ்தீப் சிங் விக்கெட் பெறவில்லை.

Story first published: Friday, March 13, 2026, 18:07 [IST]
Other articles published on Mar 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+